உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தோற்றுவாய்

1800 ஆண்டுகளுக்குமுன் உரோமகப் பேரரசே மனித உலகின் வல்லமைமிக்க நாகரிகப் பேரரசாய் அமைந்திருந்தது. பெருமை சான்ற உரோமக வெற்றிவேந்தரில் கடைசியானவர் திராஜன்'. அவர் காலத்தில் அப்பேரரசின் ஆற்றல் உச்சநிலை அடைந்திருந்தது. ஐரோப்பாவின் ஒரு பெரும்பகுதியும் நடுநிலக்கடல்2 சூழ்ந்த ஆசிய, ஆப்பிரிக்கப்பகுதிகளும் அதன் எல்லைக்கு உட்பட்டிருந்தன. இதற்கெதிராகக் கீழ்திசையிலே பாரித்தகன்ற சீனப் பேரரசு வாழ்ந்தது. புகழ்சான்ற ஹான்மரபுப் பேரரசர்3 ஆட்சியிலே அதன் பரப்பு முழுநிறைவு அடைந்திருந்தது. அது கிழக்கே பஸிபிக் மாகடலிலிருந்து1 மேற்கே காஸ்பியன்கடல்5 வரையிலும், வடக்கே அட்லாஸ் மலைத்தொடர்களிலிருந்து தெற்கே இமயமலைத் தொடர் வரையிலும் பரந்துகிடந்தது. இவ்வி ரு பேரரசுகளின் எல்லைகளுக்கும் இடைப்பட்டு இரண்டு அரசுகள் நிலவின. அவையே பார்த்திய அரசும், காந்தார அரசும் ஆகும்.

பார்த்திய அரசன் பகோரஸ் ஆண்ட பகுதி பார்த்தியா கடந்து மீடியா, பாரசிகம், ஸூஸியானா, பாபிலோனியா ஆகியவற்றை அளாவியிருந்தது. காந்தாரத்தின் அரசனாயிருந்தவன் கனிஷ்கன். அவன் சகர்களின்° தலைவன். அவன் நாட்களுக்குள் சகர்கள் ஆசியாவின் நடுமேட்டுநிலத்திலிருந்து குடியெர்ந்து பாக்டிரியப்பேரரசை வீழ்த்தியிருந்தனர். இந்நிலையில் கனிஷ்கன் ஆட்சி பாக்டிரியாவிலிருந்து" இமயமலையின் இடைப்பகுதி வரையிலும், ஆக்ஸஸ் ஆற்றிலிருந்து2 யமுனை ஆறுவரையிலும் பரவியிருந்தது.

காந்தாரத்துக்குக் கிழக்கே இயமலைத்தொடருக்குத் தெற்கே மிகப் பழமைவாய்ந்த மகதப்பேரரசு நிலவிற்று. அதை ஆட்சி செய்தவர்கள் ஆந்திரப்பெருங்குடிசார்ந்த மகா-கர்ணர்