உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

அப்பாத்துரையம் - 26

ஆவர். விந்தியமலைக்கு வடபால் மாளவம் என்ற சிறிய அரசு இருந்தது. ஆந்திரருடன் மிக நெருங்கி உறவுடைய ஒரு குடியே அவ்வரசை நிறுவியிருந்தது.அத்துடன் அது மகதரின் பிடியை உதறி எறிந்திருந்தது. இதற்கு மேற்கே சிந்து ஆற்றுவாய்முகத்திலும் குஜராத்திலும் பார்த்தியப் போர்வேட்டையாளர்கள் ஆட்சி செய்திருந்தனர்.

தக்கணத்தில் மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா ஆற்றுத் தீரங்கள் இன்னும் மகதப்பேரரசின் பகுதிகளாகவே இருந்தன. இப்பேரரசுப்பகுதியின் தென் எல்லை தமிழகத்தை அண்டிக் கிடந்தது. தமிழர் வாழ்ந்த நிலமாகிய இத்தமிழகமே இந்தியத் தீவக்குறையின்3 தென்கோடியாய் அமைந்திருந்தது.

அக்காலத்தில் கிட்டத்தட்ட இந்தியாவெங்கும் புத்த சமயமே மேம்பட்ட சமயமாயிருந்தது. ஆரியரல்லாத குடிகளே எங்கும் ஆட்சியுரிமைகொண்டிருந்தன. ஆரிய இனத்தவர்களுக்கு அக்காலம் பெருமைகுன்றிய ஒரு காலம். பார்ப்பன சமயத்துக்கோ4 அது துயரமிக்க வாழ்வு மாள்வுப் போராட்டக் காலமாய் அமைந்திருந்தது. பின்னாட்களிலே முடியரசர் பார்ப்பன சமயத்துக்கு ஆதரவளிக்க முற்பட்டபோதுகூட, ஆரியர் தம் முழு வலிமையையும் திரட்டியே எதிர் சமயங்களையும், அயலினத்தவர் ஆட்சியையும் ஒருங்கே தடமில்லாமல் ஒழிக்க முடிந்தது.

மேற்குறிப்பிட்ட சூழல்களின் பயனை நாம் சம்ஸ்கிருத இலக்கிய வகையில் காணகிறோம். கி.பி. முதல் நூற்றாண்டில் சமஸ்கிருத மொழிக்கு இலக்கியமென்று எதுவும் கிடையாது. அதேசமயம் தமிழின் நிலைமை, வியப்புக்குரிய முறையில் இதற்கு நேர்மாறானது. இக்காலத்துக்குரிய தமிழிலக்கியம் பேரளவிலும், குறைவுபடா நிலையில் கிட்டத்தட்ட முழுவடிவிலேயும் நமக்கு வந்து எட்டியுள்ளது. அத் தமிழிலக்கியம் நமக்கு அத் தொல்பழங் காலத்தில் வாழ்ந்த தமிழரின் வாழ்க்கைச் சூழல்களை மட்டுமன்றி, இந்தியாவின் பிற பகுதிகளில் வாழ்ந்த மற்ற மக்களினங்களின் சூழ்நிலைகளையும் விளக்கமாக எடுத்துக்காட்டுகிறது.

பண்டைத் தமிழிலக்கியம் அகல்பெரும் பரப்புடையது. அதேசமயம் அது முன்னால் வேறு எவர் காலடியும் படாத ஒருபுது நிலப்பரப்புப்போன்ற இயல்புடையதாகவும் இலங்குகின்றது. ஆயினும் இப்பழம்பேரிலக்கிய ஏடுகள்