உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

5

அண்மையிலேயே வெளியீட்டொளி கண்டுள்ளன. இதுகாறும் அவை கையெழுத்துப் படிவங்களாகப் பனை ஓலைகளில் எழுதப்பட்டு, அவற்றைக் கைக்கொண்டிருந்த புலவர் பெருமக்களால் வேறு எவர் கண்ணிலும் படாமல் பூட்டி வைக்கப்பட்டேயிருந்து வந்தன.

அவற்றின் மொழிநடை பழமைபடிந்ததாயிருந்தது. அவற்றின் சமயச்சார்போ அயல் சமயச்சார்பாய் அமைந்திருந்தது. இவ்விரண்டு பண்புகள் காரணமாகவும் அவை மாணவருலகில் மதிப்பார்வத்தைப் பெறமுடியாது போயின. உண்மையில் தமிழர் கல்விக்குழாங்கள்5 பலவற்றில் அவை படிக்கத் தகாதவை என்றே ஒதுக்கி வைக்கப்பட் டிருந்தன. பள்ளி மாணவர்களுக்கு அவற்றைக் கற்பிப்பதென்பது மன்னிக்கமுடியாத பழிகேடாகும் என்றுதான் சைவ வைணவப் புலவர்கள் கருதி வந்தார்கள்.

ஒரு

இந்தக் கைப்படி ஏடுகளில் மிகப்பெரும்பாலானவை சைவமடங்களிலோ, சமணமடங்களிலோ தீண்டுவாரற்றுப் புறக்கணிக் கப்பட்ட நிலையிலேயே கிடந்தன. இயல்பாக, அவை அங்ஙனமே கிடந்து நொறுங்கிப் பொடிபட்டு மடிந்தே போயிருக்கக்கூடும். அந்நிலை ஏற்பட்டுவிடாமல் தடுத்தாட் கொண்டவர்கள் முனைத்த விடாமுயற்சியுடைய ஒருசில அறிஞர்களேயாவர். அவர்களின் கடு உழைப்பும் புத்தாராய்ச்சி முறைகளும் இருளின் புதைமறைவிலிருந்து அவற்றின் மிகப்பெரும் பகுதியையும் மீட்டு அச்சொளிக்குக் கொண்டு வந்துள்ளன. ஆயினும் எத்தனையோ அருமதிப்புவாய்ந்த ஏடுகள் இன்னும் அச்சேறமுடியாமல் கைப்படிவ நிலையிலேயே இருந்து வருகின்றன. அந்நிலையில் அவற்றைக்கண்டு பயன்படுத்தக் கூடியவர்கள் ஒருசில தனிமனிதராகவே இருக்கமுடியும்.

17

16

கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியம் எதுவுமில்லை என்பதே இன்று மேலை அறிஞரின் பொதுக் கருத்தாக இருந்துவருகிறது. ஆனால், உண்மை இதற்கு நேர்மாறானது. தமிழிலக்கியத்தின் தலைசிறந்த, தற்பண்புவாய்ந்த பகுதி முழுவதும் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குமுன் இயற்றப்பட்ட பகுதியே எனலாம். அதற்குப் பின் வந்தவை மிகப்பெரும்பாலும் சமஸ்கிருத ஏடுகளைப் பின்பற்றி இயற்றப்பட்ட கீழ்த்தரமான