உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

|--

அப்பாத்துரையம் - 26

போலிப்பகர்ப்புகளாகவோ, மொழிப்பெயர்ப்புகளாகவோ மட்டுமே கொள்ளத்தக்க வையா யுள்ளன.

பண்டைத் தமிழ் இலக்கிய ஏடுகளை நான் கூர்ந்து ஆராய்ந்தபோது, எனக்கு ஏற்பட்ட கருத்து ஒன்றே ஒன்றுதான். அவற்றுள் ஒரு பெரும்பகுதி இரண்டாயிர ஆண்டுகளுக்குமுன் இயற்றப்பட்டது என்பதில் சிறிதும் ஐயம் ஏற்பட வழி இல்லை. ஏனெனில் அவை இயற்றப்பட்ட காலத்தில் தமிழர் அராபி யருடனும் கிரேக்கருடனும், உரோமருடனும் ஜாவனியருடனும் இவர்களை ஒத்த மற்ற அயல்நாட்டவருடனும் வாணிகத் தொடர்புகொண்டு, இவை காரணமாக உயர் நாகரிகமும் பெருஞ்செல்வ வளமும் உடையவர்களாய் இருந்தார்கள். அக்காலப் பொருளியல் வளத்தில் ஏற்பட்ட முன்னேற்றமே இலக்கியத் துறையிலும் தமிழருக்குப் பேரூக்கமும் தூண்டுதலும் தந்திருக்க வேண்டும் எனலாம்.

உரோமகப் பேரரசின் இலக்கிய வரலாற்றில் பேரரசன் அகஸ்டஸ்18 காலமே பொற்காலம் என்பர். தமிழ் இலக்கிய வரலாற்றிலும் அத்தகு பொற்காலம் அல்லது ‘அகஸ்டஸ் காலம்' ஒன்று உண்டு. அது கி.பி. முதல் நூற்றாண்டேயாகும். தமிழ்ப்புலவர் சங்கங்களிலே கடைசியாகக் கூறப்படும் சங்கம் அந்நாளிலேயே உக்கிரபாண்டியன் என்ற உருத்தகு பாண்டியன் காலத்தில் மதுரையில் நடைபெற்றது. இச்சங்கத்திலிருந்து ஏடுகள் இயற்றிய ஆசிரியப் பெரும் புலவர்களில் ஐம்பதின்மருக்குக் குறையாதவர்களுடைய இலக்கியக் கைவண்ணங்கள் இன்று நம் கைக்கு வந்தெட்டியுள்ளன.

இப்பெரும்புலவர்கள் பல்வேறுபிறப்பினர், பல்வேறு சமயச் சார்பினர், தமிழகத்தின் பல்வேறு பகுதியினர். அவர்களில் நிகண்டவாதிகள் இருந்தனர்; புத்தர் இருந்தனர்; பார்ப்பனர் கூடச் சிலர் இருந்தனர். அரசரும் குருமாரும், வணிகரும் மருத்துவரும், உழவரும் கலைத் தொழிலாளரும் அவர்கள் தொகையில் தொகைப்பட்டனர்.

தேசத்தின் பண்டை வரலாறு பொதுவாக மாய இருளிலும் மயக்கம்தரும் மருட்சியிலுமே மறைவுற்றுக்கிடக்கின்றது. இத்தகு நிலையில் ஒரு பேரூழியில் தேசமெங்கும் பேரொளி விளக்கங் காட்டும் இத்தனை பேரரசிரியப் புலவர்களின் ஏடுகள் நமக்குக்