உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

7

கிடைத்துள்ளன அவை நம் வரவேற்புக்குப் பெருந் தகுதியுடைய அருமதிப்புவாய்ந்த செல்வங்கள் என்பதில் ஐயமில்லை.

ப்பேரிலக்கியம் கி.பி. முதல் ஒன்றிரண்டு நூற்றாண்டு களுக்கே என்று வரையறுக்க நமக்குப் புறச்சான்றுகளின் உதவிகூட எதுவும் தேவையில்லை; அகச்சான்றுகளே அவ்வளவு மிகுதியாய் உள்ளன. ஏனெனில் தமிழ்மக்களின் சமயநிலை, சமுதாயப் பழக்க வழக்கங்கள் ஆகியவைபற்றி அதுதரும் தகவல்களே அதை வரையறை செய்யப் போதியவை ஆகும். அவற்றுட் சிலவற்றை இங்கே தருகிறோம்.

அந்நாளைய இலக்கிய ஏடுகளிலிருந்து, அக்காலத்தில் தமிழகத்தில் புத்தர்கள் இருந்தார்கள் என்று அறிகிறோம். ஆனால் அவர்களிடையே அன்று குருமார் இல்லை, புத்தரின் உருவச்சிலைகளும் அன்று வழிபடுபொருள்கள் ஆய்விடவில்லை. புத்தர்களை நாத்திகர்கள் என்று பழித்த நிகண்டவாதிகள்9 அன்று இருந்தார்கள். ஆனால் அன்று அவர்கள் தங்கள் திருத்தொண்டர்கள் அல்லது தீர்த்தங்கரர்களை வணங்கத் தொடங்கிவிடவில்லை. சிவனையும், திருமாலையும், முருகனையும் வழிபடும் திருக்கோயில்கள் இருந்தன. ஆனால். அதேசமயம் இந்திரனையும், பலதேவனையும், வழிபடும் பள்ளிகள் வழக்கிறந்து போய்விடவில்லை. பூணூலணிந்து கொண்டு தம்மை இருபிறப்பாளர் என்று கூறிக்கொண்டிருந்த பார்ப்பனர் அன்று இருந்தனர். ஆனால் இச் சிறப்புக்களைத் தமக்கும் உரியன என்று கூறிய அரசரோ, வணிகரோ அன்று இல்லை. நகரங்களிலும் கோட்டை மதில்சூழ்ந்த பேரூர்களிலும் வாழ்ந்த தமிழர் அன்றிருந்தனர். ஆனால் ஒழுங்கான குடியமைதி இல்லாமல் திரிந்த நாடோடிமக்களும் நாட்டின் சிலபல பகுதிகளில் இருந்தார்கள்.

இவ்விலக்கிய ஏடுகளின் தொல்பழமையை நிலைநாட்ட மேற்கூறிய அகச்சான்றுகளேயன்றி, அகப்புறச் சான்றுகளும் உண்டு. அவற்றில் விரித்துரைக்கப்பட்ட தமிழகத்தின் தலைமைப் பேரூர்கள், துறைமுக நகரங்கள் பல. வெளிநாட்டு இறக்குமதிப் பொருள்களாகக் குறிக்கப்பட்டவை பல. இவை பண்டைக்கிரேக்க ஆசிரியர்களான பிளினி,20 டாலமி2 ஆகியவர்களின் குறிப்புக் களுடனும்,பண்டைக் கிரேக்க நூலான ‘செங்கடல் பயணவிவரத்