உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

அப்பாத்துரையம் - 26

தொகுதி'யின்22 குறிப்புக் களுடனும் முற்றிலும் பொருத்த முடையவையாய் உள்ளன.

24

இவர்களில் பிளினி என்பார் கி.பி. 79 வரை வாழ்ந்தவர். அவர் மறைவுக்கு இரண்டு ஆண்டுகளுக்குமுன்வே அவர் தம் இயல் வரலாற்றை23 எழுதி முடித்துவிட்டார். 'செங்கடற் பயணவிவரத்’ தின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை. ஆனால் அவர் எகிப்து நாட்டவரென்றும், அவர் நூல் அகஸ்டஸ் ஸீஸர்4 காலத்துக்குப்பின், ஆனால் நாபத்தியர்25 அரசு உரோமர்களால் முடிறயடிக்கப்படுமுன் எழுதப்பட்டதென்றும் தெரியவருகிறது. ஆக்ஸுமித்தேப் பகுதியில்26 அவர்காலத்தில் ஜாஸ்கலிஸ்27 ஆண்டதாகத் தெரியவருவதிலிருந்து, அவர்காலத்தை இன்னும் திட்டமாகக் கூறமுடிகிறது. இவர் உண்மையில் கி.பி. 77 முதல் 89 வரை அபிஸினியாவை ஆண்ட ஜா-ஹக்கேலேயாவர் என்று கருதப்படுகிறது. ஆகவே, 'செங்கடற் பயணம்' பிளினியின் மறைவுக்குச் சற்றுப் பிற்பட்டு, கி.பி. 80-க்கும் 89-க்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் என்று நாம் முடிவுசெய்யக்கூடும்28 பொதுவாக, டாலமி என்று குறிக்கப்படுபவர் கிளாடியஸ் டாலமியஸ்29 என்பவரே யாவர். இவர் அலெக்ஸாண்டிரியா நகரில், பேரரசர் அன்டோனினஸ் பியஸ்31 ஆட்சியில், கி.பி.2 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்தவர் ஆவர். அவர் மறைவுற்ற ஆண்டு கி.பி.163.32

30

தமிழ்மக்களைக் குறித்தும் அவர்கள் வெளிநாட்டு வாணிகத் தொடர்புகள் குறித்தும் இவ்வாசிரியர்கள் மிகவும் சுவைகரமான தகவல்கள் தருகின்றனர். சிறப்பாக, டாலமி கடலடுத்த நகரங்கள், உள்நாட்டு நகரங்கள் பலவற்றின் பட்டியல்களைக் குறித்துச் சென்றுள்ளார். அவரால் சுட்டப் பட்ட துறைமுக நகரங்களில் பலவற்றைத் தமிழ்ப்பாடல்களின் குறிப்புக்கொண்டு நாம் தெளியலாம். ஆனால் கடற்கரை யிலிருந்து விலகிய நகரங்கள் வகையில், அவர் குறிப்பிட்ட

டங்களைக் கண்டுணர்வது மிகவும் அரிதாயிருக்கின்றது. இதற்குக் காரணம் இந்தியத் தீவக்குறையின் வடிவத்தையே அவர் தவறாகக் குறித்துக் கொண்டதே. பம்பாய் நகரிலிருந்து மசூலிபட்டினம் கடந்து நீடித்த கடற்கரையை அவர் எப்படியோ வளைந்து வளைந்து மேற்கிருந்து கிழக்கேசெல்லும் ஒருவரை