உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

9

யாக்கியிருந்தார். இந்தக் குளறுபடியான கற்பனை வடிவத்தில் தீவக்குறை என்ற ஒன்றுக்கே இடம் இல்லாமல் போய்விட்டது.

இந்தியாவிலிருந்து எகிப்துக்கும், எகிப்திலிருந்து இந்தியா வுக்கும் அந்நாட்களில் பலர் பயணம் செய்துவந்தனர். இருசாராரி டமிருந்தும் மலைகள், ஆறுகள், நகரங்கள் ஆகியவற்றைப் பற்றிய விவரங்களை டாலமி உசாவியறிந்தார். ஆனால் அறிந்த இந்தத் தகவல்களையெல்லாம் அவர் தம் உருப்படாத கற்பனைப்படத்தில் திணித்து இடம்காணத் தகுந்தவகையில் திரித்தார். எனினும், இந்தக் குளறுபடி யினிடையிலும் மக்களினத்தவர், அவர்கள் முக்கிய நகரங்கள் ஆகியவைபற்றி அவர்தரும் பெயர்கள் வியக்கத்தக்க முறையில் சரிநுட்பம் உடையவையாகவே இருக்கின்றன.தகவல்களை அவர் எவ்வளவு உழைப்புடனும், விடா முயற்சியுடனும், சேகரித்துத் தொகுத்திருக்கவேண்டும் என்பதை இது காட்டுகிறது.

உக்கிரபாண்டியனும், கடைச்சங்கப் புலவர்களும் மிக மிக முற்பட்ட காலத்தவர்கள் என்பதில் ஐயமிருக்க வழியில்லை. பிற்காலத் தமிழ்நூல்களின் பல்வேறுபட்ட குறிப்புக்களிலிருந்தே இதை உய்த்துணரமுடியும். அவற்றள் ஒன்றாக நாம் இங்கே குறிப்பிடத் தக்கது இறையனார் அகப்பொருளின் உரை3 ஆகும். அதன் ஆசிரியர் முசிறியைச் சார்ந்த நீலகண்டன் ஆவர். அவர் தமிழ் இலக்கியத்தின் சுருக்கமான வரலாறொன்று தருகிறார். அதனிடை யே மதுரையில் உக்கிரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற கடைச் சங்கத்தின் புலவர்களைப்பற்றியும் அவர் குறித்துள்ளார்.

உரையாசிரியர் தம் உரைக்கு விளக்கமாகத் தரும் பாடல்கள் ஒவ்வொன்றும் பாண்டியன் நெடுமாறன் புகழ் பாடுகின்றது. இப்பாண்டியனே நெல்வேலிப்போர்வென்ற அரிகேசரி ஆவான். தம் காலத்தில் அம் மன்னன் உயிருடன் வாழ்ந்திருந்ததாகவும். வடபுலங்களிலிருந்து படையெடுத்துவந்த எதிரிகளை முறியடித்துத் துரத்தியபின் சேரசோழபாண்டிய மண்டலங்களை ஆண்டு வந்ததாகவும் அப்பாடல்கள் குறிக்கின்றன.

பேர்போன இந்த நெல்வேலிப் போரைப்பற்றி நந்திவர்ம பல்லவமல்லன்3 வெளியிட்ட உதயேந்திரம்பட்டயம் குறிப்பிடுகிறது.