உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

//--

அப்பாத்துரையம் - 26

இப்பல்லவமல்லன் மேலைச் சாளுக்கிய அரசன் இரண்டாம் விக்கிரமாதித்தனுடன் சமகாலத்தவன். சாளுக்கிய நாட்டிலுள்ள5 கல்வெட்டுகளின்படி, அவன் கி.பி. 733 முதல் கி.பி. 747 வரை ஆண்டான் என்று தெரிகிறது. எனவே, நெல்வேலிவென்ற நெடுஞ் செழியனைப் புகழ்கின்ற உரையாசிரியர் நீலகண்டனாரும் 8-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர் ஆதல் வேண்டும் என்பது தெளிவு.

சங்கப்புலவர்களின்

பாடல்கள் அகம், நற்றிணை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து முதலிய தொகை நூல்கள் அல்லது தொகுப்புக்கள் வடிவில், உரையாசிரியர் காலத்திலே நிலவியதாக உரையிலிருந்தே தெரியவருகிறது. தவிர, சிலப்பதிகாரத்திலிருந்தும் அவர் மேற் கோள்கள் காட்யிருக்கிறார்.

அகம் 401 தனித்தனிப்பாடல்கள் அடங்கியது. அவை 200-க்கு மேற்பட்ட புலவர்களால் வெவ்வெறு காலச்சூழல்களில் இயற்றப்பட்டவை. குறுந்தொகை இதுபோலவே 205 புலவர்களின் பாடல்திரட்டு. நற்றிணை 200-க்குக் குறையாத புலவர்கள் பாடிய 401 பாடல்களுடையது. பதிற்றுப்பத்து வெவ்வேறான பத்துப் புலவர்கள் பாடிய பத்துப்பாடல்கள் அடங்கியது. இத்தொகை நூல்கள் எல்லாவற்றையும் சேர்த்துப் புலவர்களை எண்ணியதில் 514 புலவரின் பெயர்கள் கிடைத்தன. புலவர்களின் இப்பெருந்தொகை நோக்க, அவர்களில் மிகப் பழமையானவர் நீலகண்டன் காலத்துக்குக் குறைந்தது ஆறு அல்லது ஏழு நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவரா யிருந்திருக்க வேண்டும் என்று இழுக்குறாமல் கூறலாம்.

புலவர்

க்கணிப்பின்படி நூற்றாண்டுக்கு நூறு தேறக்கூடும். இதுவே சிறுதொகை என்று கூற முடியாதது.

அகப்பாட்டுக்களில் பல கரிகால சோழனையும், சேரன் ஆதனையும், சேரன் செங்குட்டுவனையும்36 குறிப்பிடுகின்றன. பதிற்றுப்பத்தில் கடைச்சங்கப் புலவருள் ஒருவரான பரணர் பாடிய பத்துப்பாட்டுக்கள் செங்கட்டுவன் சேரனைப் பாராட்டுகின்றன.37 இவற்றால் செங்குட்டுவன் சேரன் 8-ஆம் நூற்றாண்டுக்கு நெடுநாள் முன்னிருந்தான் என்பது ஐயத்துக்கு இடமின்றி உறுதிப்படுகிறது.