உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

39

11

கடைச்சங்க காலத்தை இன்னும் திருத்தமாக வரையறுக்கத் தக்க நேரடியான தகவல்கள் உண்டு. அவையே சோழ அரசன் கரிகாலன் காலத்திலும், அவன் மருமகன் சேரன் ஆதன் காலத்திலும், ஆதன் புதல்வன் செங்குடுவன் சேரன்38 அல்லது இமயவரம்பன் காலத்திலும் இயற்றப்பட்ட பாடல்களில் வரும் வரலாற்றுப் பெயர்க் குறிப்புக்கள் ஆகும். கடைசியாகக் கூறப்பட்ட சேர அரசனுக்கு இளங்கோ அடிகள் என்று ஓர் இளவல் உண்டு. அவர் நிகண்ட சமயம் சார்ந்த ஒரு துறவி யாயினார். அவர் 'சிலப்பதிகாரம்'40 என்ற பெயருடைய ஒரு நீண்ட காவியத்தின் ஆசிரியர். அதில் அவர் சேரர் தலை நகரிலே, தம் தமயன் இமயவரம்பனால் நடத்தப்படும் ஒரு திருவிழாவைப் பற்றிக் கூறுகிறார். அதில் இலங்கை அரசன் கயவாகு, பெயர் குறிப்பிடப்படாத ஒரு மாளவ அரசனுடன் வந்திருந்ததாக அவர் தெரிவிக்கிறார்.

41

இலங்கை இரசனொருவனைப்பற்றிய இந்தக் குறிப்பீடு இமயவரம்பன் காலத்தை வரையறுக்க நமக்குப் பெரிதும் உதவுகிறது. சிங்களவரின் காலக் கணிப்பேடுகளில் மரபுரையாகச் சேகரித்துத் தரப்பட்ட இலங்கை மன்னர் பெயர்வரிசைப் பட்டியல்கள் நெடுநீளமானவை. அவற்றிடையே கயவாகு என்ற பெயர் இரண்டே இரண்டு தடவைதான் காணப்படுகிறது. முதலாம் கயவாகு 2-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்திருந்தான். ரண்டாம் கயவாகுவோ 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தான்.42

சிலப்பதிகாரத்தில் குறிக்கப்பட்ட அரசன் இரண்டாம் கயவாகுவாயிருந்திருந்தால், கயவாகுவுடன் சமகாலத்தவனான சேரனுக்குப் பாட்டன் முறையுடைய கரிகாலசோழன் 11 அல்லது 12-ஆம் நூற்றாண்டிலேயே வாழ்ந்திருக்கமுடியும்.

ஆனால், பல தமிழ்ப் பாடல்களின் குறிப்புக்களும் 43 10, 1-ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சோழ மன்னர்களின் மானியங்களைப் பதிவுசெய்யும் செப்புப்பட்டய வாசகங்களின் குறிப்புக்களும்" இதற்கு முரண்பட்டவையாகின்றன. அந்நாளில் ஆண்ட சோழ மன்னர்களின் முன்னோர்களில் மிகவம் முற்பட்ட தொடக்க காலத்துச் சோழனாக அவை முதலாம் கரிகால சோழனைக்45 குறிக்கின்றன. ஆகவே, சிலப்பதிகாரத்தில்