உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12) ||_ _.

குறிப்பிடப்பட்ட

அப்பாத்துரையம் - 26

கயவாகு இரண்டாம் கயவாகுவாய்

இருந்திருக்க முடியாது என்பது தெளிவு. அவன் கி.பி. 113 முதல் கி.பி. 125 வரை ஆண்டதாகத் தெரியவரும் இலங்கை அரசன் முதலாம் கயவாகுவாகவே இருந்திருக்க முடியும்.

சிலப்பதிகாரம் நமக்கு வேறு சில செய்திகளும் தருகிறது. செங்குட்டுவன் சேரன் கங்கைக் கரையிலுள்ள மகதநாட்டின் அரசனை நட்பு முறையில் சென்று பார்வையிட்டான். சிலப்பதிகாரம் அவ்வரசனை ‘நூற்றுவர் கன்னர்' அதாவது நூறு கர்ணர்கள் என்று சுட்டியுள்ளது. இத்தொடர் எனக்கு நீண்டநாள் மயக்கத்தை உண்டுபண்ணிற்று. இறுதியிலேதான் அது‘சதகர்ணி’ என்ற சமஸ்கிருதப் பெயரின் மொழிபெயர்ப்பு என்பது புலப்பட்டது. கர்ண மரபு, அதாவது ஆந்திர மரபைச் சேர்ந்த பல அரசர்கள் 'சதகர்ணி' என்ற பட்டந்தாங்கியவர்களாய் இருந்தார்கள். இவ்வரசர்கள் பலரின் நாணயங்களும், கல்வெட்டுக் களும் கிடைத்துள்ளன.அவற்றில் இப்பெயரின் ‘பாளி' வடிவமான ‘சதகானி’ இடம்பெறுகிறது. ஆயினும் சமஸ்கிருதப் புலவர்கள் இப்பெயரைச் சமஸ்கிருதத்தில் சாதகர்ணி' என்று தவறாகக்கொண்டு மயக்கம் விளைவித்துள்ளனர்.

6

நூற்றுவர்கன்னர் (நூறு கர்ணர்கள்) என்ற தமிழ் வழக்குச் சமகாலத்துக்குரிய ஒரு தமிழ்க்காவிய வழக்கு. ஆகவே திருத்தமான பெயர் 'சதகர்ணி'யே என்பதில் தடையில்லை. இப்பெயர், 'சதம்' அதாவது நூறு, 'கர்ணம்' அதாவது காது என்ற இரு சொற்களடங்கிய இணைசொல் ஆகும்.தகவல்களைத் தெரிவிக்கும் நூறு வாயில்களை அதாவது நூறு ஒற்றர்களை உடைய அரசன் என்பதே தொடரின் பொருளாயிருக்கக்கூடும் என்று தெளியலாம்.

மகதப்பேரரசின் ஆட்சி வரலாறுபற்றி வாயுபுராணம், விஷ்ணூபுராணம், மத்ஸ்யபுராணம், பாகவதபுராணம் ஆகியவை நமக்குத் தகவல்கள் தருகின்றன. அவற்றால் மௌரியர்கள் அதை 137 ஆண்டுகளும், அவர்கள்பின் வந்த சுங்கர்கள் 112 ஆண்டுகளும், கண்வாயனர் 45 ஆண்டுகளும் ஆண்டனர் என்று அறிகிறோம். இறுதியில் ஆந்திர மரபைச் சேர்ந்த 30 அரசர்கள் 456 ஆண்டுகள் ஆண்டதாகத் தெரிகிறது. ஆனால், எந்தப் புராணமும் ஆந்திர அரசர் பெயர்களை முழுமையாகத் தரவில்லை.