உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

13

இப்புராணங்களில் மிகப் பழமை வாய்ந்தது மத்ஸ்ய புராணமே. கூடியமட்டும் பேரளவான பெயர்களைத் தருவதும் அதுவே. அதில் 20 அரசர்களின் பெயர்களும் அவர்களில் ஒவ்வொருவர் ஆண்ட கால அளவையும் தரப்பட்டுள்ளன.

முற்காலப்

மகதத்தை ஆண்ட பேரரசர்களின் வரலாற்றிலே, ஐயத்துக்கிடமின்றி உறுதியாகக் கொள்ளத்தக்க கால எல்லை சந்திரகுப்தனுடையதே." அவன் ஸெலியூக்கஸ் நிக்கடோரின்7 சமகாலத்தவன்.ஸெலியூக்கஸ் கி.மு.310-இல் ஆட்சி தொடங்கினான். கி.மு. 305-இல் அவன் சந்திரகுப்தனுடன் உடன்படிக்கை செய்து கொண்டிருந்தான். சந்திரகுப்தன் ஆட்சித்தொடக்கம் ஸெலியூக்கஸ் முடியேற்புக்கு இரண்டாண்டு கட்குமுன், அதாவது கி.மு. 312-இல் என்று வரையறுக்கலாம். இதிலிருந்து தொடங்கிக் கணக்கிட்டால், முதல் சதகர்ணியின் ஆட்சி கி.பி.77-இல் தொடங்கி, கி.பி. 133-இல் முடிவுற்றதென்று காள்ளவேண்டும். மத்ஸ்யபுராணம் தரும் தகவல்களை அடிப்படையாகக்கொண்டு, இக்கணக்குக் கீழே தரப்படுகிறது:-

10 மோரியர்கள் : 137 ஆண்டுகள் : கி.மு 312 - கி.மு.175.

10 சங்கர்கள் : 112 ஆண்டுகள் : கி.மு. 175 - கி.மு. 63.

4 கண்வாயனர் : 45 ஆண்டுகள் : கி.மு. 63 -

கி.மு.18.

ஆந்திரர் முப்பதின்மரில் முதல் அறுவர் கணக்கு வருமாறு:

சிகுகன்: 23 ஆண்டுகள் : கி.மு.18 -கி.பி. 5.

கிருஷ்ணன் : 18 ஆண்டுகள் : கி.மு. 5 - கி.பி 23.

சீமலகர்ணி : 18 ஆண்டுகள் : கி.கி. 23 - கி.பி. 41. பூர்ணோத்சுங்கன் : 18 ஆண்டுகள் : கி.பி. 41 - கி.பி. 59. சிரீவஸ்வாமி : 18 ஆண்டுகள் : கி.பி. 59 - கி.பி. 77.

சதகர்ணி : 56 ஆண்டுகள் : கி.பி. 77 - கி.பி 133

இந்தச் சதகர்ணியின் ஆட்சிக்காலம் இலங்கையரசன் கயவாகுவின் ஆட்சிக்காலத்துடன் முழு அளவிலும் பொருந்து கிறது.மகாவம்சோவின்படி, அவ்விலங்கையரசன் ஆட்சிக்காலம் கி.பி.113 முதல் 125 வரை ஆகும். ஆகவே மத்ஸ்ய புராணத்தில்