உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

||---

அப்பாத்துரையம் - 26

கண்ட பெயர்ப்பட்டியலின்படி, கி.பி. 77 முதல் 133 வரை ஆண்டதாகத் தெரிகிற இந்த முதல் சதகர்ணியே, சிலப்பதிகாரத்தில் செங்குட்டுவன் சேரன், கயவாகு ஆகியவர்களுடன் சமகாலத்தவனாகக் குறிக்கப்பட்ட மகதப் பேரரசன் சதகர்ணி என்பதற்கு ஐயமில்லை. குறைந்த அளவு சந்திரகுப்தன் காலமுதல் இந்த முதல் சதகர்ணியின் காலம் வரையிலாவது, புராணங்களுக்கும் மகாவம்சோவுக்கம் உள்ள காலப்பொருத்தம் முழுநிறைவானது என்றே ஒத்துக்கொள்ளத் தக்க தாயுள்ளது. புராண வரலாற்றினாலும் மகாவம்சோவி னாலும் பேணித்தரப்பட்ட மரபுவழி வரலாறு பொதுவாக நம்பத்தக்கதே என்பதற்கும் இந்தக் காலப்பொருத்தம் ஒரு வலிமைவாய்ந்த சான்று ஆகும்.

மகாவம்சோ கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. தீபவம்சோ இன்னும் முற்பட்டது. இரண்டு வரலாற்றுத் தொகுப்புகளும் முதலாம் கயவாகுவைப்பற்றிக் குறிப்பிடுகின்றன. முதலாம். கயவாகுவின் தந்தை ‘கழுகுமூக்க’னென்று குறிப்பிடப் படும் திஸ்ஸன் ஆவான். அவன் காலத்தில் ஒரு சோழ அரசன் இலங்கைமீது படையெடுத்துப் பல்லாயிரமக்களைச் சிறைப்படுத்திச் சென்றதாக அறிகிறோம். கயவாகு கி.பி. 113-இல் பட்டத்துக்கு வந்தவுடன், இச்செயலுக்கு எதிர்செயலாக, சோழநாட்டின்மீது படையெடுத்தா னென்றும் தெரியவருகிறது.

48

சிறைப்பிடித்துக்கொண்டு செல்லப்பட்டமக்களைப் பற்றிய மரபுரை ஒன்று உலவுகிறது. அந்நாளில் காவிரிக்குக் கரை கட்டும் வேலை நடைபெற்று வந்தது. சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் அந்த வேலையில் ஈடுபடுத்தப்படுவதற்காகவே கொண்டு செல்லப் பட்டதாக அறிகிறோம். பிற்காலத் தமிழ்ப்பாடல்களுடனும், கல்வெட்டுக்களுடனும்4” இச்செய்தி முற்றிலும் இசைகிறது. காவிரி இருகரைகளையும் மேடாகக் கட்டத் தொடங்கியவன் கரிகாலசோழன் என்று அவை புகழ்கின்றன. காவிரியின் கடல் முகத்திலிருந்து கிட்டத்தட்ட 100கல் தொலைவுவரை ஆற்றின் இருகரை நெடுகிலும் கரைகள் கட்டமைப்பதென்பது எளிதான ஒரு சிறுசெயலன்று. அது கரிகாலன் ஆட்சிக்காலத்துக்குள் முடிந்திருக்கவும் முடியாது. ஆகவே கரைகட்டுவதற்கு வேலை யாட்களைச் சிறைப்பிடித்துக் கொண்ர்வதற்காக இலங்கைமீது