உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

15

படையெடுத்த சோழன் கரிகால னாகவும் இருக்கலாம்; அவனுக்கு உடனடுத்த சோழனாகவும் இருக்க இடமுண்டு.

2-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த முதலாம் கயவாகுவுடன் செங்குட்டுவன் சேரன் சமகாலத்தவன் என்பதற்கு இம்மரபுரை மற்றுமொரு சான்றாய் அமைகிறது. செங்குட்டுவனின் பாட்டனான கரிகால்சோழன் ஆட்சிக்காலம் இதன் மூலம் கி.பி. முதல் நூற்றாண்டின் பிற்பகுதிக்குரியது என்றாகிறது. இதையே இன்னொரு வகையாகக் கூறினால், கரிகாலன் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட அரசன் ஆகிறான்.

கடைச்சங்கப் புலவர்களில் பலர் ஆதன், செங்குட்டுவன் ஆகிய சேர அரசர்களைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள். தமிழ் இலக்கியம்பற்றி நான் இனி விரித்துரைக்கப்போகும் செய்திகளின் மூலம், இப்புலவர்களும் இதே காலத்துக்குரியவர்கள் என்பது தெளிவுபடும்.

வரும் இயல்களில், நான் தமிழர் வாழும் நிலத்தின் பண்டை நிலஇயல் கூறுகளை முதலில் விளக்கி, அதன் பின்னர், தமிழரின் வெளிநாட்டு வாணிகத்தொடர்பு, தமிழ் பேசும் மக்களிடையே யுள்ள இனவகை குலவகை வேறுபாடுகள், அவர்கள் அரசியல் வரலாறு ஆகியவற்றை விரித்துரைக்க எண்ணூகிறேன்.இறுதியில் தமிழ் மக்கள் குழுவியல்வாழ்வு, போர்முறை, இலக்கியம், மெய்விளக்கக் கோட்பாடுகள், சமயம் ஆகியவைபற்றிய சுருக்கக் குறிப்புகளுடன் நூலை முடிக்கக் கருதியுள்ளேன்.

அடிக்குறிப்புகள்

1. Emperor Trajan

Mediterranean sea.

2.

3.

Han dynasty

4.

Pacific Ocean

5.

6.

Atlas Mountains.

The Caspian sea இது உலகின் மிகப் பெரிய உள் நிலக்கடல்.

7. Pacorus, King of Parthia.

8.

Media. இது பாரசீகத்தை அடுத்துள்ள பகுதி.