உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




9.

10.

16

அப்பாத்துரையம் - 26

Kanishka, King of Gandhara. சிலப்பதிகாரக் கதையில் கண்ணகிச் சிலையின் கல்லைச் சுமந்தவனாகக் குறிக்கப்பட்ட கனகன் இப்பேரரசனே என்று கூறப்படுகிறது. இதற்கேற்ப அயலினத்தானும் புத்த சமயத்தானுமாகிய இவன் பின் மரபினர் வலிகுன்றியவராய் இந்திய சிவ நெறிப்பெயர் தாங்கினர் என்று தெரியவருகிறது.

Sakas. இவர்கள் படையெடுப்பிலிருந்தே சக ஆண்டு அல்லது சாலிவாகன் ஆண்டு தொடங்கிற்று என்று நம்பப்படுகிறது.

11. Bactria இன்றைய துருக்கிஸ்தானம் அடுத்தபகுதி.

12.

13.

14.

15.

16.

17.

18.

Oxus. காஸிபியன் கடலில் விழும் துருக்கிஸ்தானப் பகுதியிலுள்ள ஆறு, நடு ஆசியாவுக்கு வடக்கில் உள்ளது.

South Indian Peninsula.

Brahminism. சைவ வைணவ சமயங்களுடன் சேர்ந்து கலந்து ஒன்றுபட்டபின் ஆ ரியசமயம் இந்து சமயம் என்று வெளிநாட்டாரால் குறிக்கப்பட்டது. இக்கலப்புக்கு முற்பட்ட புத்தசமணகால ஆரியசமயமே வரலாற்றாசிரியர்களால் பார்ப்பன சமயம் எனக் குறிக்கப்படுகிறது. அதை வேதவேள்விச் சமயம் என்று தமிழில் குறிக்கலாம்.

Tamil schools. இங்கே குறிக்கப்படுவது கோட்பாட்டுக் குழுக்கள்

இவ்வறிஞருள் தலைசிறந்தவராக நான் குறிக்கக் கூடியவர் இராய்பகதூர் ஸி. டப்ள்யூ. தாமோதரம் பிள்ளை பி.ஏ., பி.எல். அவர்களேயாவார். அவர் சேனாவரையர், நச்சினார்க்கினியர் உரைகளுடன், தொல்காப்பிய முழுவதையும் நல்லாதனார் இயற்றிய கலித்தொகையையும் வெளியிட்டுதவியுள்ளார். மேலும் கும்பகோணம் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியரான திரு. சாமிநாதையர் அவர்கள் பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், புறநானூறு ஆகியவற்றை வெளியிட்டுள்ளார். இவர்கள் இருவருடன் கூட, சென்னை, திரு. மயிலை சண்முகம்பிள்ளையை நான் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவர் மிகவும் துணிச்சலாகவே மணிமேகலையின் பதிப்பொன்று கொண்டு வந்திருக்கிறார். அவர் பதிப்பில் மூலபாடத்துடன் உரை எதுவும் இல்லையானாலும், அவர் துணிகர முயற்சி பாராட்டுவதற் குரியதேயாகும்.

டாக்டர் பர்னல் ‘தென் இந்தியப் பழம்பதிவாராய்ச்சி' என்ற தம் புத்தகத்திலும் டாக்டர் கால்டுவெல்', 'திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்' என்ற தம் புத்தகத்தின் நூன் முகத்திலும் இக்கருத்தைக் குறித்துள்ளார்.

Augustus. கி.மு. முதல் நூற்றாண்டிறுதியில் ஜூலியஸ் ஸீஸரால் வகுக்கப்பட்ட பேரரசைக் கைப்பற்றி ஆண்ட உரோமகத்தின் முதற் பேரரசரான அகஸ்டஸ் ஹீஸர், ஜூலியஸ் ஸீஸரின் புதல்வர். இலத்தீன் இலக்கியம் வளங்கொழித்தது அவர் காலத்திலேயே. ஆகவே தான் மேலை உலக வழக்கில் அகஸ்டஸ் காலம் என்பது, கலைப் பொற்காலம், என்ற பொருளில் உவமத்தொகையாக வழங்குகிறது.