உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

33

மலையையும் பஃறுளி என்ற ஆற்றினால் வளமூட்டப்பட்ட ஓர் அகன்ற பேரெல்லையையும் அது உள்ளடக்கியிருந்த தென்பதையும் நினைவில் கொண்டிருந்தனர். கடலின் ஒரு திடீரெழுச்சியினால் குமரிக்கோடு என்ற மலையும், பஃறுளியாறு ஓடிய பரப்பும் மறைந்துவிட்டன.78

இதுபோன்ற கடலெழுச்சிகளும் அதன் பயனான நில அமிழ்வுகளும் இலங்கையின் தென்மேற்குக் கரையில் கி.மு.2-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்தன என்று அத்தீவின் புத்த ஆண்டுக் கணிப் பேடுகள் கூறுகின்றன?”

கீழ்கரையில் டாலமி கீழ்வரும் மாகாணங்கள், ஆறுகள், நகரங்கள் ஆகியவற்றைப்பற்றிய விவரம் தருகிறார்:-

கரியாயின் நாடு80 : இதன்பின் கொல்கியக்குடாவில்81 முத்துக்குளிக்கும் தொழில் நடைபெறும் பகுதியில், சோசி கூரை வாணிகக்களமான கொல்காய், சோலன் ஆற்றுமுகம்82 ஆகியவை. கரியாயின் உள்நாட்டு நகர்கள்: மென்டெலா, சேலூர் திட்டோனா, மண்டித்தூர், 83 பாண்டியன் நாடு, ஓர்காலிக் குடாக்கடலருகே, கல்லிகிக்கோன் என்றழைக்கப்படும் கோடி முனை; அர்கைரான் என்ற நகரம், வேலூர் என்ற ஒரு வாணிகக்களம்.84 பாண்டிய நாட்டின் உள்நாட்டு நகர்கள் : தைனூர், பெரிங்கரை, கொரிந்தியூர், தங்கலா அல்லது தாகா, பாண்டியன் தலைநகர் மதுரை, ஆக்கூர்.85 பத்தாய் நாடு: பத்தாய், தலைநகர் நிகமா, தெல்கைர், கொரூலா நகர். பத்தாய் நாட்டின் உள்நாட்டு நகர்கள்: கலிந்தோயா, பத்தா, தலாரா.87 தனிப்படப் பரலியா என்றழைக்கப்படும் பகுதியில் தொரிங்காய் நாடு; கபேராஸ் ஆற்றுமுகம், வாணிகக்களமான கபேரிஸ்; வாணிகக்களமான சபுராஸ் 88 சோரட்டாயில் பரலியாவுக் குரிய உள்நாட்டு நகர்கள்: கலியூர், தென்னகோரா, எய்க்கூர், சோரநாகாஸின் தலைநகரான ஒர்த்தூரா, பெரே, ஆபூர், கர்மரா, மாகூர்.89

86

அருவர்னோரி (அர்வர்னாய்) : வாணிகக்களமான பொதுகெ, வாணிகக்களமான மேலாங்கி, துனா ஆற்று முகப்பு, கொத்திஸ், வாணிக இணைப்பான மனர்ஃவா அல்லது மனலியார்ஃவா. அர்வர்னாயின் உள்நாட்டு நகரங்காளவன :