உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

அப்பாத்துரையம் - 26

கெரௌகெ, ஃவ்ரூரியன். காரிகெ, போலூர், பிகெந்தகா, இயாத்தூர், ஸ்கோபொலூரா, இகர்த்தா, பஸர்நாகாஸின் தலைநகரான மாலங்கா, கந்திப்பட்னம்.90

அர்வர்னாய் நிலப்பகுதிக்கு வடக்கே, மைசொலாஸ் என்ற கிருஷ்ணா ஆற்றுத்தீரத்திலுள்ள மைசோலியா இருப்பதாக டாலமி குறிப்பிடுகிறார். குமரிமுனைக்கும், தாப்ரோபேன் அல்லது இலங்கைக்குமிடையே அவர் மனிகெரிஸ் என்ற தீவும் ஆர்கலிகக் குடாவில் கோரி2 என்ற மற்றொரு தீவும் இருப்பதாகக் குறித்துள்ளார்.3

குமரிமுனையிலிருந்து செல்லும் கீழ் கடற்கரையில் மீன் பிடிப்பதால் வாழ்க்கை நடத்திய பரதவர் என்ற இனத்தவர் வாழ்ந்தார்கள். டாலமி குறிப்பிடும் கரியாய்4 இவர்களே இக்குறிப்பின் சரியான தமிழ் வடிவம் ‘கரையர்’ அதாவது கரையிலுள்ளவர் என்பதே. தமிழரிடையே பரதவர்க்குப் பொதுமுறையில் இன்றும் விளங்கும் பெயர் இதுவே. பரதவர் நாட்டிலுள்ள முக்கிய நகரமான கொற்கை முத்துக்குளிப்புத் தொழிலுக்குரிய ஒரு நடுவிடம். இந்நகரின் மக்களில் பெரும் பாலோர் முத்துக் குறிப்போராகவும் சங்கறுப்பவராகவுமே இருந்தனர்.5 முத்துக்குளித்தல் பாண்டிய நாட்டின் அரசியல் வருவாயில் ஒரு பெரும்பகுதியாயிருந்த காரணத்தினாலேயே பட்டத்து இளவரசர் தங்கியிருப்பது வழக்கமாயிருந்தது.6

அங்கேயே

முன்பு கடற்கரையிலிருந்த இந்நகரம் இப்போது ஐந்துகல் தொலை உள்நாட்டில் உள்ளது. கடல் கொற்கையிலிருந்து பின்வாங்கிய பின் கடற்கரையில் காயல் என்ற ஒரு புதிய வாணிகக்களம் உண்டாயிற்று. இதுவே 13-ஆம் நூற்றாண்டில் மார்க்கோபோலோ வருகைதந்த பொழுது வளமான ஒரு கடல் துறைமுகமாயிருந்தது. சில காலம் கழித்து காயலும் கடலிலிருந்து மிகுதொலைவாகிவிட்டது. அதுவும் கைவிடப்பட்டது.

சோசிகூரை என்ற துறைமுகப்பட்டினம் எதுவென்று என்னால் அடையாளம் காணக்கூடவில்லை. சோலன் ஆறு பெரும்பாலும் தாம்பிரவருணியாகவே இருக்கவேண்டும் என்று தெளியலாம். இது தமிழில் செம்பில் என்று வழங்கப்பட்டது.