உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

37

இருந்தது. இதில் ஒழுங்கான இடையீடிட்டு மரங்கள் வைக்கப்பட்டிருந்தன. இவ்விடத்திலேயே நகரின் பெருஞ் சந்தை நடைபெற்றது.

பட்டினப்பாக்கத்தின் முக்கியத் தெருக்கள் அரசவீதி, தேர்வீதி, கடைத்தெரு ஆகியவை. வணிகர், பார்ப்பனர், வேளாளர், மருத்துவர், கணியர் ஆகியோர் தனித்தனி தெருவில் வாழ்ந்தனர். அரண்மனையைச் சுற்றிலும் தேர்ப்பாகர், குதிரைப்பாகர், ஆனைப்பாகர், மன்னன் மெய்க்காவல் படைவீரர் ஆகியோர் இல்லங்கள் இருந்தன. பாணர், விறலியர், மாகதர், நடிகர், பாடகர், கோமாளிகள், சங்கறுப்பவர், பூமாலை தொடுப்பதில் வல்லுநர், முத்துக்கோப்பவர், கழியும் ஒவ்வொரு நாழிகையையும் விநாடியையும் கணித்தறிந்து கூறும் காலக்கணிகள் ஆகியோரும் அரண்மனைப் பணிமக்களும் பட்டினப்பாக்கத்தில் வாழ்ந்தார்கள்!

107

டற்கரையருகே மருவூர்ப் பாக்கத்தில் விற்பனை மேடைகள், கிடங்குகள், மானின் கண்போன்ற பலகணிகளை யுடைய பண்ட சாலைகள் ஆகியவை இருந்தன. கப்பலிலிருந்து இறக்கிய சரக்குகள் அந்தப் பண்டசாலைகளில் சேமிக்கப் பட்டிருந்தன, இங்கே சரக்குகள் மீதெல்லாம் (சோழர் சின்னமாகிய) புலிப்பொறி பதிக்கப்பட்டு, சுங்கவரிகள் செலுத்தப் பட்டபின் வணிகரின் கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டன. இதனருகே யவன வணிகரின் குடியிருப்புக்கள் இருந்தன. இங்கே பல கவர்ச்சிகரமான பொருள்கள் மக்கள் கண்ணில் படும்படியாக விலைக்கு வைக்கப்பட்டிருந்தன. மற்றும் இங்கேயே பலமொழிகள் பேசும் கடல்கடந்த நாடுகளிலிருந்து வந்த வெளிநாட்டு வணிகர்களுக்குரிய தங்கிடங்கள் இருந்தன. நறுமணச்சாந்து, நறுமணப்பொடி, மலர்கள், நறும்புகை ஆகியவை விற்பவர், பட்டிலும், பஞ்சிலும், கம்பளியிலும், தையல் வேலை செய்பவர்கள், சந்தனம், அகில், பவளம், முத்து, பொன், மணிக்கற்கள் ஆகியவற்றின் விற்பனையாளர்கள், கூலவணிகர், சலவையாளர், மீன் விற்பவர், உமணர், ஊன் வினைஞர், கருமார், பித்தளை வேளையாட்கள், தச்சர், கன்னார், ஓவியர், சிற்பிகள், தோல்வினைஞர், விளையாட்டுக் கருவிகள் செய்வோர் ஆகியோர் மருவூர்ப் பாக்கத்தில் தங்கியிருந்தார்கள் 109