உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

அப்பாத்துரையம் - 26

காவிரிப் பட்டினத்தில் சோழ அரசன் அரண்மனை ஒரு பாரிய வனப்பமைந்த கட்டடமாயிருந்தது. "மகதத்திலிருந்து கைதேர்ந்த கலைத் தொழிலாளர்களும், மராடத்திலிருந்துவந்த கைவினைஞர்களும், அவந்தியிலிருந்துவந்த கொல்லர்களும் யவனத் தச்சர்களும் தமிழகத்திலுள்ள தலைசிறந்த வேலை யாட்களும் சேர்ந்து அதனை அத்தனை வீறு மிக்கதாகவும் வனப்பு மிக்கதாகவும் ஆக்கியிருந்ததனால்,பின் தலைமுறையினர் தெய்வத்தச்சனாகிய மயனே அதை இயற்றினான் என்று மரபுரையாகக் கூறினர்.”

அரசிருக்கை மண்டபம் கண்ணைப் பறிக்கும் கவினொளி யுடையதாயிருந்தது. அதன் சுவர்கள் பொன் தகடுகள் பதித்து மெருகிடப்பட்டிருந்தன. மென்முகட்டைத் தாங்கிய தூண்களின் உள்ளீடு பவளத்தாலானதாகவும், மேற்கட்டு பல்வண்ண ஒளியுடைய மணிக்கற்கள் பதித்தாகவும் இருந்தன. மேல்தளம் நுணுக்க விரிவுடைய சிற்பவேலைகளும் வண்ண ஓவிய வேலைப்பாடுகளும் உடையதா யிருந்தது. மேன் முகட்டின் அருகெங்கும் ஒளி மணி முத்துக் கோவைகளின் தொங்கல்களால் புனையப்பட்டிருந்தன.

110

அரசிருக்கை மண்டபமல்லாமல், வேறும் பலவகை வனப்பு மிக்க கூறுகள் அவ்வரண்மனையில் இருந்தன. எடுத்துக் காட்டாகக் கீழ்வருவனவற்றைக் கூறலாம். வச்சிர நாட்டரசனால் அனுப்பப்பட்டிருந்த முத்துப் பந்தல், மகத அரசனால் புனைந்தியற்றி அனுப்பப்பட்ட கொலு மன்றம், அவந்தி அரசனால் பரிசாக அளிக்கப்பட்ட அணிமணி வாயில் முகப்பு ஆ ஆகியவை அவற்றுள் சில."

அரண்மனையைச் சூழ்ந்த பூங்காவிலே பொறிகள் மூலம் நீர் இறைக்கும் கேணிகள், செய்குன்றுகள், செயற்கை அருவிகள், பூம்பந்தர்கள், அகன்ற ஏரி குளங்கள், மீளாப் பொறி வழிகள், படிகக் கற்கள் பாவப்பெற்ற நிழல்தரும் சாலைப்பாதைகள் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன!12

பூங்காவில் சிறு வேட்டை விலங்குகளாகிய குறுங்கால் களையுடைய காடைகளும், நீண்ட செவிகளையுடைய முயல்களும், துள்ளும் இளமான்மறிகளும் மலையாடுகளும் சேகரித்துப் பேணப்பட்டிருந்தன!13