உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




58

அப்பாத்துரையம் - 26

சரக்குகளும் மிகுதி யில்லை. இவை தவிர, கப்பல்கள் நிற்குமிடம் கரையிலிருந்து நெடுந்தொலைவில் இருக்கிறது. படகுகளில் சரக்குகளை ஏற்றி இறக்கிக்கொண்டு செல்லவேண்டும்.

""

“நான் எழுதும் சமயத்தில் இப்பகுதியை ஆள்பவர் கேலபொத்ராஸ்I5 ஆவர்."

"இதனருகே இதைவிட இன்னும் வாய்ப்பான மற்றொரு துறைமுகம் உண்டு. 'நியாகுந்தி' என்ற நாட்டின் பகுதியில் அது அமைந்துள்ளது. அதுவே பராகே" என்பது. இந்நாட்டின் அரசன் பெயர் பாண்டியன். அவன் இத் துறைமுகத்திலிருந்து நெடுந் தொலைவில் உள்நாட்டில் உள்ள மதுரை என்னும் நகரத்தில் தங்கியுள்ளான். ஆனால் பராகே அருகில் உள்ள பகுதியின் பெயர் கொட்ட நாரா” அல்லது குட்டநாடு என்பது இங்கிருந்து ஒற்றை மரத்தில் குடைந்த படகுகளில் மிளகு பராகேக்குக் கொண்டு வரப்படுகிறது.'

“இந்த நாடுகள், துறைமுகங்கள், நகரங்களின் பெயர்கள் இதற்குமுன் எந்த ஆசிரியர் குறிப்புகளிலும் காணப்படமாட்டா. இதிலிருந்து இந்த நாடுகளில் நடைபெற்றுவரும் மாறுதல் நிலைகளை உய்த்துணரலாம்."

66

கடலோடிகள் இந்தியாவிலிருந்து திரும்பவும் தம் பயணத்தை எகிப்திய மாதமுறைப்படி துபிஸில்18 அதாவது டிஸம்பரில் தொடங்குகிறார்கள். மிகப் பிந்தி போனாலும் எகிப்திய மாதம் மெகிர்” ஆறாம் நாள் அதாவது ஜனவரி நடுப்பகுதிக்குப்பின் அவர்கள் பயண காலத்தை நீட்டிப்பதில்லை. இவ்வாறு அவர்கள் ஓர் ஆண்டுக்குள் போய்த் திரும்பிவிடு கிறார்கள். திரும்பும் பயணத்தில் அவர்கள் (வல்ட்டர்னஸ்20 என்ற) தென்கிழக்குக் காற்றோடு வந்து செங்கடலில் புகுந்தபின் தென்மேற்கு அல்லது தெற்கு வீசும் காற்றினுடன் வருகிறார்கள்.”

"21

செங்கடல் வாணிகப்பயண விவரங்களைக் கூறும்போது, செங்கடற் பயண ஆசிரியர் முதலில் செங்கடற்கரையிலுள்ள கப்பல் தங்கல் துறைகளையும், அவற்றின் ஏற்றுமதி இறக்குமதி களையும் விரித்துரைக்கிறார். அதன்பின் அவர் ஆப்பிரக்கக் கரையின் துறைமுகங்களையும், அராபிய, பாரசீகக்கரைகளின் துறைமுகங் களையும் வகுத்துணர்த்துகிறார். சிந்து ஆற்றுமுகம்