உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

59

கடந்தபின், அவர் பராகா குடாக்கடலையும் (அதாவது கச் குடாவையும்) பருகஸாக் குடாக்கடலையும் (அதாவது காம்பேக் குடாவையும்) அதன்பின் நம்மடியோஸ் (நருமதையாற்று)க் கடல்முகத்தருகிலுள்ள பருகஸாவையும் (புரோச்சையும்) அவர் குறிப்பிடுகிறார்.

பருகஸாவுக்குத் தெற்கேயுள்ள நாடு தக்கினாபதேஸ் (அதாவது தட்சிணாபதம்) என்று வழங்கப்பட்டது. இங்குள்ள வாணிகக்களங்களாக அவர் கல்லியேனா (பம்பாய் அருகிலுள்ள தற்கால கல்யாண்) என்ற இடத்தைக் குறிப்பிடுகிறார். கல்லியே னாவுக்குப்பின் அவர் ஏழு துறைமுகங்களைப்பற்றிக் கூறுகிறார். இவற்றின்பின் ஸெஸெக்ரீனே என்ற தீவுகளையும், ஐகிடியாஸ் என்ற தீவையும் கெர்ஸானிஸஸ் என்ற இடத்தருகிலுள்ள கைனிதாய் என்ற தீவையும்பற்றி விரித்துரைக்கிறார்.22 இத்தீவுகளிலே கடற்கொள்ளைக்காரர்கள் வாழ்ந்ததாகத் தெரிகிறது. இறுதியாக அவர் கூறும் தீவு லியூகெ (வெள்ளைத் தீவு) ஆகும்.

இவற்றின்பின் அவர் விரிவுரை வருமாறு:

"வெள்ளைத் தீவுக்கு (தூவக்கல்) இப்பால் கெப்ரோ தெபாதாஸ் (சேரபுத்திரர்) நாடு இருக்கிறது. இது லிமுரிகெ (தமிழகம்) என்றும் அழைக்கப்பெறும். இதன் முதற்பகுதி நவுரா3. அதன்பின் கரையருகே தூண்டிஸ் (தொண்டி) என்ற பேரூர் உள்ளது. இதனையடுத்து முசிறி என்ற வளமான துறைமுகம் இருக்கிறது. இங்கே நாட்டுக் கப்பல்கள் மட்டுமன்றி அரியகேயிலிருந்து (ஆரியத்திலிருந்து) வரும் கப்பல்களும் எகிப்திலிருந்து வரும் கிரேக்க கப்பல்களும் வாணிக முறையில் சந்திக்கின்றன. அது ஓர் ஆற்றின் கரையில் ஆனால் 20 ஸ்டேடியாத்24 தொலைவில் இருக்கிறது. துண்டிஸ் (தொண்டி) என்ற இடத்திலிருந்து அது 500 ஸ்டேடியாத் தொலைவு உடையது. இந்த இடைவழித் தொலை ஆற்றுக்கு அறாகக் கரை வழியாக அளந்தாலும், கரைநெடுகிலும் கடல்வழி அளந்தாலும் ஒரே தொலைவுதான். (நவுரா, துண்டிஸ், முசிரிஸ் என்ற) இந்த மூன்றுக்கும் பின்னால் நெல்குந்தா செல்லலாம். இது இன்னொரு மண்டலத்தைச் சேர்ந்தது. பாண்டியனால் ஆளப்பட்டது. இந்த வாணிகக்களமும் முசிரிஸி லிருந்து ஆற்று வழியாய்