உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்வாங்கு வாழ்தல்

(119

கூடத் துணியாமல் சரேலென்று தோட்டத்துக்குள் திரும்பி வந்து விட்டான்.

டாமியின் உள்ளத்துக்கு இந்நிகழ்ச்சி பேரதிர்ச்சியும் குழப்பமும் தந்தது. அவன் குடிப் பெருமையுணர்ச்சிக்கு மட்டுமன்றி அவன் தன்மதிப்புக்கே இது சீர் குலைவாய் அமைந்து அவனைக் குழப்பியது. இந்நிலையில் பார்லோ அவனைக் கண்டு அவனிருந்த அலங்கோலத்தைப் பார்த்து “இது என்ன? உனக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்.

டாமி நடந்தது யாவற்றையும் ஒன்று விடாமல் கூறினான்.

ஆசிரியர் தொடக்கத்தில் அவன்மீது சினங் கொண் டார். பின் கவலை காட்டினார். இறுதியில் புன்முறுவலுடன் “நடந்த மட்டும் எல்லாம் நலமே. இந்நிகழ்ச்சியின் பாடங்களை நீ நன்குணர்ந்தால் இதனாலுள்ள சிறு கெடுதியினும் பன்மடங்கு மேற்படும். இப்போது சென்று உடல் கழுவி ஆடைமாற்றிக்கொள்” என்றார்.

நல

அடிக்குறிப்பு

1. Habit is Second Nature.