உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




9. ஹாரி டாமி உரையாடல்

ஹாரி வந்த பின் டாமி அவனிடமும் எல்லா விவரமும் கூறிவிட்டுப்பின் "இதன் படிப்பினையை நீ உணர்ந்தால் எவ்வளவோ நலம் ஏற்படும் என்று ஆசிரியர் கூறினாரே, அப் படிப்பினைகள் என்னவாயிருக்கக்கூடும்? ஒரே ஒரு பாடம் எனக்குப் புலப்படுகிறது. நான் ஆய்ந்தோய்ந்து பாராமல் வேலியேறிக் குதித்தது தவறு. இது தவிர நான் வேறு என்ன தவறு செய்தேன்?” என்றான்.

66

ஹாரி இதைக் கேட்டு நகைக்காமலிருக்க முடியவில்லை. ‘உனக்குத் தெரியவரும் குற்றம் இவ்வளவு தானா? என்னைக் கேட்டால் ஆய்ந்தோய்ந்து பாராதது ஒரு பெருங்குற்ற மாயினும், அது பொதுவாக எவரும் செய்யக் கூடும் குற்றமே. கோபத்தில் ஆய்ந்தோய்ந்து பார்ப்பது யாருக்கும் எளிதன்று. ஆனால் உனக்கு அவமதிப்பு நேர்ந்தது அதனாலல்லவே. நான் இப்படி விழுந்திருந்தால், நீ இரக்கமடைந்து உதவுவது உறுதி. நீ உதவியதற்கு நான் வெட்கப்படுவேனா? தவறிக் குட்டையில் விழுந்ததற்குச் சிறிது எச்சரிக்கை வேண்டும் என்று தானே யாரும் சொல்வார்கள். நீ அடையும் மனக்குழப்பம் அதனாலல்லவே!” என்றான்.

டாமி, நீ கூறுவது சரியே. ஆனால் என் தவறு என்ன? நான் என்ன செய்திருக்கக் கூடும்?” என்று கேட்டான்.

66

ஹாரி அவனுக்கு நயமாக அவன் தவறுகளை விளக்கினான். “ஏழை என்ற காரணத்துக்காக நீ சிறுவனை வேலை ஏவியதும் அதட்டிப் பேசியதும் பிறர் தன் மதிப்பைப் புண்படுத்தும் செயல். தன் மதிப்புடைய எவனும் எவ்வளவு ஏழையானாலும் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து வேலை செய்யமாட்டான். ஆனால் அதே சிறுவன் நீ துன்பத்துட் சிக்கியபோது நீ உத்தரவிடாமலும்