உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்வாங்கு வாழ்தல்

121

நீ கேட்காமலும் உனக்கு உதவினானன்றோ? தொடக்கத்தில் அவன் தன் மதிப்பைப் புண்படுத்தாமல் ‘அன்பு கூர்ந்து பந்தை எடுத்துப் போடுவாயா, தம்பி,' என்று கேட்டிருந்தால் அவன் கட்டாயம் எடுத்துப் போட்டிருப்பான். நீ இன்னும் பெருந்தன்மை யுடையவனாயிருந்தால் அவனை ஏவாமல் நீயே சென்று எடுத்திருக்கலாம். 'நீ என்ன கால் நொண்டியா' என்று அவன் கேட்டதன் பொருள் அது தான்” என்றான்.

டாமி

நீ கூறுவது ஓரளவு சரிதான். ஆனால் இந்த நியாயம் ஒரு தரத்திலுள்ளவர்களிடையில் மட்டும் தானே பொருந்தும்? பிறப்பிலேயே நன் மக்கள் வகுப்பில் பிறந்த எனக்கும் தொழில் செய்யப் பிறந்த அச்சிறுவனுக்கும் இதே ஒழுங்கு பொருந்துமா? தொழில் செய்யும் வகுப்பினர் எங்கள் வீடுகளில் வேலை செய்யவில்லையா? யாரும் அதைக் குறையாகக் கருதவில்லையே!

ஹாரி

பிறப்பிலேயே நன்மக்கள் என்றால் என்ன? தொழில் செய்யப் பிறந்தவர்கள் என்றால் என்ன?

டாமி

நல்ல வீடு, தோட்டம் துறவுகள், பணவாய்ப்பு, ஆட்கள் எடுபிடி உடையவர்கள் நன்மக்கள். இவை குறைந்தும் இல்லாமலும் பிறர்க்கு ஊழியம் செய்து பிழைப்பவர்கள் தாழ்குடியினர். அவர்களே வேலைக்காரர்களாகிறார்கள்.

ஹாரி

உங்களிடம் பணம் பணம் இருக்கிறது. நீங்கள் அதைத் துய்க்கிறீர்கள். அவர்களிடம் பணம் இல்லை. ஆகவே நீங்கள் அவர்கள் விரும்பும் பணத்தை ஊதியமாகக் கொடுத்து உழைப்பு வாங்குகிறீர்கள். அப்போதும் நீங்கள் கொடுக்க விரும்பினால் மட்டும் போதாது. அவர்களும் வாங்க விரும்பி அதற்கீடாக உழைக்க ஒப்புக் கொண்டால் தானே அவர்கள் ஊழியர்களாக முடியும்? ஒன்றும் வாங்காமலே அவர்கள் உழைக்கப்