உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்வாங்கு வாழ்தல்

141

டாமியின் நல்லெண்ணமும் நல்லார்வமும் அவனை உடனே செயலிலிறங்கத் தூண்டிற்று. அவன் உடன்தானே ஓர் அப்பத்துண்டைக் கையிலெடுத்துக் கொண்டு இதனை ஏதாவது ஒரு முரட்டு விலங்குக்குக் கொடுத்து அதன் குணத்தை மாற்றி அன்பு செலுத்துவேன் என்று புறப்பட்டான். எந்த விலங்குக்குக் கொடுக்க வேண்டும் என்றும் அவன் உறுதி செய்து கொள்ள வில்லை. முதன் முதல் கண்ணில் தென்படும் விலங்கினிடமே தன் செயலார்வத்தைக் காட்டுவது என்று எண்ணிக் கொண்டான்.

அவன் கண்ணில் முதல் முதல் தென்பட்டது ஒரு சிறு பன்றிக்குட்டி தான். அது பால்குடிப் பருவத்துக்குட்டி. அது தாயை விட்டுச் சிறிது தொலைவில் வெயில் காய்ந்து கொண் டிருந்தது. டாமி அதனை அன்புகனிய அழைத்து அப்பத் துண்டைக் கொடுக்கப் போனான். ஆனால் அத்தகைய செயல் எதையும் அறியப் பழகாத அச்சிறு விலங்கு பிடிபடாமல் உறுமிக்கொண்டே ஓடத் தலைப்பட்டது. டாமி “அட அறிவு கெட்ட, நன்றி கெட்ட பன்றிக்குட்டி, உனக்கு உணவுதரத் தானே வருகிறேன். ஏன் ஓடுகிறாய்? உனக்கு அன்புப் பாடம் கற்றுக் கொடுக்கிறேன் பார்!" என்று கூறிக் கொண்டு அதன் பின்னங்கால்களைப் பிடித்து இழுத்தான். இப் புதுப் பயிற்சி பிடிக்காது மருண்ட பன்றிக்குட்டி வீல், வீல் என்று கத்திக் கொண்டு உதறித் துடித்தது. ஓசை கேட்கும் தொலைவுக் குள்ளேயே இருந்த தாய்ப்பன்றி தன் குட்டியின் கதறல் கேட்டுப் பாய்ந்து வந்தது. அதன் மீந்த குட்டிகளும் கலகலத்துக் கூவிக்கொண்டு தாயுடன் ஓடிவந்தன. இப்படையெடுப்பைக் கண்டு சற்றுக் கலவரமடைந்த டாமி பன்றிக்குட்டியை நழுவ விட்டான். அது முழு வலிமையுடன் தாயிடம் பாய்ந் தோடுகையில் அவன் காலடிகளிடையில் புகுந்து அவனைத் தூக்கிப்போட்டது. அவ்விடம் சேறாயிருந்ததால் டாமியும் தன் நிலையிழந்து கால் வழுக்கி விழுந்தான். கால் முதல் தலைவரை சேற்றில் புரண்டது. அதன்பின் அவன் எழுந்திருக்கு முன் குட்டியை நோக்கி ஓடிவந்த தாய்ப்பன்றியும் பிறகுட்டிகளும் அவன் மீது மோதி அவனை மீண்டும் உருட்டித்தள்ளி மிதித்துச் சென்றன.