உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(142

அப்பாத்துரையம் - 28

இதற்குள் டாமியின் நல்லார்வமும் அதனையடுத்து ஏற்பட்ட பொறுமையும் முற்றிலும் மறைந்தது. அவன் கடுஞ்சினங்கொண்டு தாய்ப்பன்றியையும் பின்னங்காலால் பிடித்து உதைக்கத் தொடங்கினான். உதைபட்டு வெருட்சி யடைந்த அது அவனைப் பல முழதூரம் இழுத்துச் சென்று சேற்றில் தள்ளிவிட்டது. இத்தடவை அவன் விழுந்தெழுமுன் அப்பக்கமாக வந்த வாத்துப் படை பன்றிகளுக் கஞ்சி அவன்மீது புரண்டுருண்டோடிற்று. இவையெவற்றாலும் அவனுக்கு மிகுதி காயங்கள் ஏற்பட இடமில்லாமல் போனாலும் அவனுடைகள் அழுக்கடைந்து சிதைந்தன. அவனுக்கு அவமதிப்பும் ஆத்திரமும் ஏற்பட்டது.

இந்நிலையில் அவனைக்கண்ட ஆசிரியருக்கு ஒரு புறமும் சிரிப்பும் ஒருபுறம் பரிவும் ஏற்பட்டது. இதெல்லாம் என்ன என்று அவர் கேட்டபோது அவன் “இம்முரட்டு விலங்குக்கு அன்புப் பயிற்சி தர முயன்றேன். இதெல்லாம் உங்கள் பாடத்தைச் செய்கையிற் காட்ட முனைந்ததன் விளைவுதான்” என்றான். ஆசிரியர் 'நீ கற்றதும் நன்று. கற்றதைச் செயலில் காட்ட முனைந்ததும் நன்று. முனைந்த வகையில் தான் கோளாறு. எந்தப் புதிய கருத்தையும் முற்றிலும் பயன்படுத்த உலகப் பொது அறிவு அல்லது அனுபவ அறிவு வேண்டும். இத்தவறுகளால்தான் நீ உன் குறைபாடுகளைக் காண முடியும். தண்ணீரில் தத்தளிக்காமல் ஒருவர் நீந்தப் படிப்பதில்லை. கீழே விழாமல் மிதி வண்டியிற் பழகுவதில்லை. ஆகவே தேறுதல் அடைந்து போய் ஆடை மாற்றி உடலலம்பிக் கொள்' என்றார்.

அவன் உடலலம்பி ஓய்வுற்றபின் ஆசிரியர் மெல்ல அவனுக்கு அவன் தவற்றை விளக்கினார். “மனிதரைப் போல் விலங்குகளுக்கும் இயற்கை இயல்பும் பழக்க இயல்புகளும் உண்டு. இவற்றின் பயனாக நம் உட்கோள்களை அவை உடனடியாக அறிந்து கொள்வதில்லை. நாம் செய்வதன் நோக்கத்தை அவை படிப்படியாக உணர்ந்து கொண்டதாக அவற்றின் செயல் மூலம் அறிந்தே அவை இயல்பு மாறுகின்றன என்று அறிய வேண்டும். அதுவரை பொறுமை காட்ட வேண்டும். பன்றிக் குட்டியை நீ அழைத்தபோது அது வரவில்லை. அதுதானாக வரும் வரை நீ காத்திருக்க வேண்டும். ஏனெனில் அதன் இயற்கையியல்பு