86
அப்பாத்துரையம் - 29
இத்தகையோர் இன்பத்துள் இன்பம் தேடுவதற்கு மாறாக, துன்பத்துள் துன்பம் தேடுபவர் ஆவர்.
வறுமையிற் செம்மை நாடிய மாது இங்ஙனம் கருத்தை ஓடாவிட்டாளென்று வைத்துக்கொள்வோம். அவள் வாழ்வில் பொங்கி வளரும் நிறைவு மங்கித் தேயும் குறைவாகிவிடும் என்று கூறத் தேவையில்லை.
6
ஏழையர் ஏக்கத்திற்குரிய செல்வர் வாழ்வுகூட அவ் வணங்கின் செல்வம் உடையதல்ல என்பது காணும்போது, ஏங்கும் ஏழைகள் அவாவும் இன்பத்தின் போலித் தன்மை நமக்கு நன்கு விளங்கும். அவர்கள் தேடுவது விளக்கல்ல, மின்மினி; நீரல்ல, கானல்! பெறுவதோ மின்மினியன்று, நச்சுவளி; வெறுங் கானலல்ல, வெப்பு!
வறுமையிற் செம்மையுடையவரே உண்மை இன்பம் பெறும் செல்வர். செல்வரும் அச்செல்வம் பெறமுடியா தென்றில்லை. ஆனால் அஃது அச்செல்வத்தைத் தாமே துய்ப்பத னாலன்று. பிறரையும் துய்க்கவிடுவதனாலேயே, ஊக்குவதா லேயே பெறத்தக்கது. ஏனெனில் இன்பத்தின் மறைதிறவு தன்னலத்திலில்லை, பொதுநலத்திலேயே பொதிந்துள்ளது.
ஏழைகளின் ஏக்கத்திலே, பொறாமையிலே - அவர்கள் வறுமை காரணமாக அவர்களை வலிந்து ஆட்கொள்வதிலே, அவர்கள் உழைப்பை விலைகொடுத்து வாங்குவதிலே இன்பமோ, ஆற்றலோ நாடும் செல்வர் உண்டு. ஆனால் இஃது உண்மையில் இரட்டைத் தீமையை இன்பமென்றும், எல்லை யிலா வலிமைக் கேட்டை ஆற்றலென்றும் கொள்ளும் முழு மடைமையே யாகும். ஏழைகள் ஏக்கமும் பொறாமையும் அவர்கள் அடிமைப் பணிவும் ஆற்றலாகவோ பகைமையாகவோ தோன்றாதிருக்கலாம். ஆனால் ஏலா ஆற்றல் ஆற்றல் கேடல்ல, ஆற்றல் பெருக்கமே. ஓட்டம் தடுக்கப்பட்ட நீரின் அமைதிபோல், அது தேக்க அமைதியாய், செல்வர் செல்வம் அழிக்கும் பகை யாற்றலாகவே முடியும். தவிர, பிறர் ஏழ்மையில் மகிழும் அல்லது உழைப்பால் பயன்பெறும் செல்வர், உழைப்பும் பயிற்சியும் இழந்து நலிவர். அவர்கள் செல்வத்தின் மெய்ப்பயனான பிறர் நலச் செல்வமும் அன்புச் சேமநிதியும் ஒருங்கே இழப்பவர் ஆவர்.