உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

85

பொல்லாப்பு இழந்து அவளுக்குப் புத்துரம் அளிக்கும் பொலிவு உண்டுபண்ணுகின்றன. அவள் இன்ப துன்பச் சூழல் இரண்டிலும் மகிழ்வுடனேயே, கிளர்ச்சியுடனேயே இருக்க முடிகிறது ஏனென்றால் குறுகிய தன்னலத்தில் அடைபடாத அவள் உள்ளம் தானே தன் துயர் துடைத்துப் பிறர் துயர் துடைக்க விரைந்துவிடுகிறது.

தன் துயர் துடைத்து முடிந்தபின் பிறர் துயர் அகற்றலாம் என்றுகூட அவள் காத்திருப்பதில்லை. ஏனெனில் அது போலிப் பொதுநலவாணர் சாக்குப்போக்கு. பிறர் துயர் துடைக்க எண்ணாதவனுக்குத் தன் துயர் அகலுவதேயில்லை. இதனை யுணர்ந்து வறுமையிடையே தன் தேவைகளைக் குறைத்துக் கொண்டு அவள் பிறர் தேவைகளைக் கவனிக்கிறாள்.

பிறர்நலம் பேணுபவர்களுக்குத் தேவைகள் தேவை களாயமையாமலே அகலுகின்றன. பிறர் துயரகற்றவும், பிறர் தேவை நிறைவேற்றவும் பயன்படுகிறோம் என்ற எண்ணமே ‘வறுமையிற் செம்மை' காணும் அம்மாதுக்குப் பெருஞ் செல்வர் காணா அருஞ்செல்வம் ஆகின்றது.

வறுமையிற் ‘செம்மை'ச் செல்வம்

தன் முயற்சியுடன் பிறர் சேவையிலீடுபட்ட மேற்கூறிய அணங்குக்கு நேர்மாறானவர்களும் உண்டு. அவர்கள் உழைக்கும் நாட்களில் ஓய்வு நாட்களை எண்ணி ஏங்குவர். இன்றியமையாத் தேவைகளுக்காக உழைக்கும் நேரத்திலேயே உல்லாசப் பொருள்களுக்கு அங்கலாய்ப்பர்! செல்வர் எளிதாகப் பெறும் இனிய தின்பண்டங்களை நினைத்துக் கஞ்சிக்கற்ற எத்தனையோ ஏழைகள் ஏங்குகின்றனர்! செல்வர் துய்க்கும் மின்னொளி, வானொலி, இசைத்தட்டு ஆகியவற்றை எண்ணி, தாம் பெறாத வேறு உயர் வாய்ப்புக்களை அவாவி அமைதி கெடுகின்றனர். தம்மால் கலந்துகொள்ள வாய்ப்பற்ற விருந்துக் குழாங்களையும், நாடகத் திரைப்படக் காட்சிகளையும், உயர்தரப் பகட்டாரவார உடைகளையும், ஊர்திகளையும் நினைந்து நினைந்து எத்தனை பேர்கள் தம்மிடம் இருப்பவற்றையும் துய்க்காதவர்களாகி வாணாளை வீணாளாக்கி உழல்கின்றனர்!