84
அப்பாத்துரையம் - 29
பெருங்குடும்பப் பொறுப்பைத் தனியாகத்தானே நின்று ஒரு மாது ஏற்கிறாள். அவள் வருவாய் வாரத்துக்கு ஒரு பொன்னுக்கு மேலில்லை. ஆனால் அலுவலகத்தின் வருவாய்க்குரிய அந்த வேலையுடன் அவள் அமைவதில்லை. வீட்டு வேலையை முற்றிலும் ஒழுங்காக மீந்த நேரத்தில் செய்கிறாள். உணவு சமைப்பது, உடை துவைப்பது முதலிய இன்றியமையாச் செயல் களை மட்டுமன்றி, வீடு துப்புரவாக்குதல், ஒழுங்கமைதி காத்தல், பிள்ளைகள் வளர்ப்பு முதலிய நீண்டகால நலப்பாதுகாப்புக் களையும் அவள் முட்டின்றி முடிக்கிறாள்.
இவற்றைத் தொடர்ந்து செய்வதன் மூலமே அவளுக்கு உடல் வலிவு, நல் அறிவு, ஓய்வு ஆகிய மூன்றும் கிடைக்கின்றன.
இச் செல்வங்கள் அவளுக்கு மேலும் ஒரு செல்வம் அளிக்கின்றன. அவள் கருத்துத் தன்னைப்போல் வாழத் தெரியாத ஏலமாட்டா எளியவர்கள் பக்கம் சாய்கிறது. நோயுற்ற அயலார்களுக்கு அவள் அறிவுரையும், ஆதரவும் நல்குகிறாள். முற்றிலும் கையிழந்தவர்கள், வருவாயற்றவர்களுக்கு, ஊக்கம் தரும் சிறு கையுதவி, பொருளுதவி அளித்து அவர்களுக்கும் புதுப்பாதை வகுக்கிறாள்.
இத்தகு இருமைச் செல்வ வாழ்வுகளின் மூலம் அவள் வறுமைக்குரிய இரு தீமைகளை, இரு அளறுகளை, தன் வாயிலருகே வரவிடாமல் தடுத்துவிடுகிறாள். அவை கடன், ஏக்கம் ஆகியவைகளே.
காலை முதல் மாலை வரை, இரவில்கூட, அவள் வேலை செய்கிறாள். குறிக்கோளற்ற சோம்பல் தரும் தீங்குகள், துயரங்கள், வேதனைகளுக்கு அவள் வாழ்வில் இடமிருக்க முடியாது. அவள் துயில் அமைந்த துயில், ஏனெனில் வேலையி லிருந்து சற்று விலகிய நேரம்கூட, அவளுக்குச் சோம்பியிருக்கும் நேரமல்ல, சோர்வகற்றும் ஓய்வு நேரம்; புதிய முயற்சிகளுக்குப் புத்தூக்கம் தரும் இடையின்ப வேளை.
சூழலைப் பற்றி அவள் குறைப்படுவதில்லை, முனகுவ தில்லை - சூழலின் பொல்லாங்குகள் அவள் முயற்சியாலேயே தளர்ந்தகலுகின்றன. அவை பொல்லாங்குகளுக்குரிய ய