பேரின்பச் சோலை
105
உயிர்களையும் குடும்பம் குடும்பமாக, சமுதாயம் சமுதாயமாக, இனம் இனமாகத் திரண்டு வாழச் செய்கின்றன. அழிவையும் அழித்தலையும் இயல்பாகக் கொண்ட உயிரின வாழ்வைத் துன்பத்தின் பிள்ளையாகிய இந்த அன்பே பண்பு நோக்கி, நாகரிக நோக்கி, படிப்படியாக வளர்க்கிறது.
புறம் தெரியாச் சிறு தன்மறுப்புகள்
தன்மறுப்புக்களில் தலைசிறந்த தன்மறுப்புப் புறந்தெரியா மறை தன்மறுப்புக்களே. இவை அகநிலைத் தன்மறுப்புக்கள், நெஞ்சத்தினுள்ளாக, உள்ளத்தின் ஆழ்தடத்தில் நிகழ்பவை. ஓசையற்ற, சந்தடியற்ற இத் தன்மறுப்புக்களின் ஆற்றலும் பண்பும் அளவிடற்கரியன. ஏனெனில் இவை செய்தவர்க்கும் ஆக்கம் தருபவை. செயலுக்கு ஆளானவர்க்கும் ஆக்கம் தருபவை. எல்லையற்ற இப்பயனை நோக்க, இத் தன்மறுப்புக்கள் சிறியவையே. ஆனால் அதே சமயம் இத் தன்மறுப்புக்குரியவர் முயற்சியும் பெரிது. தற்காலிகமாகவேனும், அதனால் அவர்கள் விரும்பி மேற்கொள்ளும் துன்பமும் பெரிதேயாகும். பெருமை யுடைய தன்மறுப்புக்களை விடுத்து, இச்சின்னஞ்சிறு தன் மறுப்புக்களைத் தேர்ந்தெடுத்து, தற்காலிகமாக அவர்கள் இன்பத்தை மட்டுமன்றி, தன்மறுப்பின் பெருமையையும் மறுக்க வேண்டியவர்களாகின்றனர்!
தன்மறுப்பிலீடுபட்டு அதை மேற்கொள்ளத் துணியும் மக்கள்கூடப் பெரும்பாலும் தம் இன்றியமையா நாள்முறை வாழ்வின் சிறிய எல்லைக்குட்பட்ட சிறு செய்திகளில் தன் மறுப்பு மேற்கொள்ள எண்ணுவதில்லை. இன்றியமையா நாள்முறை வாழ்வுக்கு எட்டாத பேரெல்லை சென்று அதன் பெருந் தன்மறுப்புகளிலேயே அவர்கள் பேராற்றல் ஆர்வத் துடன் செல்லும். அருகே இருக்கும் வாழ்வு அவர்கள் கண் களுக்குப் புலப்படுவதில்லை. அதன் இன்றியமையாமையும் புலனாவதில்லை. ஏனெனில் தன்னலம் விடுக்க எண்ணிய போதும் அவர்கள் தன்முனைப்பை விடுவதில்லை. உணர்ச்சி களுக்கு அடிமைப்படாமல் இருப்பதுமில்லை. பெருமை நாடி, தம் சூழலின் சிறுமை கடக்கின்றனர், அவாத் தூண்டுதலால் தம் இன்றியமையாச் சூழல் விலக்கித் தம் அவா எல்லை கடந்து தன்மறுப்புக் களம் நாடுகின்றனர். தம்மை மறுப்பதைவிடத் தம்