(104) ||.
பணிவும் பண்பும்
அப்பாத்துரையம் - 29
-
தன் முனைப்பின் ஒரு பகுதியை இழப்பதால் தன் முனைப்பையே, தன் தனி நலத்தையே, தன்னையே மறப்பதால், துறப்பதால்கூட - ஒருவன் உண்மையில் இழப்பது எதுவும் கிடையாது. ஆயினும் பழுதை என்று நினைத்துப் பாம்பைப் பிடித்துத் தொங்குபவன் அதைக் கைவிடத் தயங்குவதுபோல, இத்துறவுக்கு மனிதர் மயங்கித் தயங்குகின்றனர். துறக்க வருந்து கின்றனர். துறப்பவன் துறக்க வேண்டுவது இம்மயக்கத்தையே - துன்பத்தை இன்பத் தோற்றமென்றும், துன்பத் தோற்றத்தில் புதையுண்ட இன்பத்தைத் துன்பமென்றும் கருதி மயங்கும் மயக்கத்தையே! ஆயினும் தன்னல நோக்கமில்லாமலே இதைச் செய்தாலன்றிப் பயன் ஏற்படாததாலேயே, அறிவு வழியாக இந்நிலையை எவரும் அடைய முடிவதில்லை. பண்புவழி, அன்பு வழி, நீடித்த பயிர்ப்பின் வழியாக மட்டுமே அத்துறவு நிலை அடைதற்குரியதாகும்.
எல்லாத் துறவும், உண்மைத் துறவு என்ற முறையில், அகத் துறவே, அதற்கு அடிப்படையான தூண்டுதல், அறிவன்று, அறிவுக்கு உயிர் மூலமான பண்பு, பண்பட்ட உள்ளத்தின் இயல்பான பணிவு. இந்தப் பணிவே தன் மறுப்புக்கு வழி வகுத்துப் பொதுநலத்துக்கு வாயிலாயமைகிறது. மனிதரின் அகவளர்ச்சி எப்படியும் எல்லா மனிதரையும் முன்னோ பின்னோ இந்தப் பணிவு நிலைக்குக் கொண்டு வந்தாக வேண்டும். ஆன்மிக வளர்ச்சியின் முதற்பெருந் திரும்புகட்டம் இதுவே. இதனை அடையுமுன் மனிதன் பல சிறுசிறு தன் மறுப்புக்களில் பயின்று தேர்ச்சியடைகிறான். பல சிறு சிறு தன்முனைப்புக் கருத்துக்களிலும் எண்ணங்களிலும் ஈடுபட்டு ஈடுபட்டு உழல்கிறான். துன்பம் அவனுக்குத் தரும் படிப்பினை யால், அவன் தன்முனைப்பு மழுங்குகிறது.
நீடித்த இப் பயிற்சியால் படிப்படியாகப் பணிவும், அன்பும், அவற்றின் நீடித்த பயிர்ப்பால் பண்பும் உள்ளீடான விளைவு களாக முதிர்கின்றன. ஒவ்வொரு துன்பப் படியிலும், அவாக் களால் ஏற்படும் ஒவ்வொரு கொந்தளிப்பும் இத்திசையில் மனிதனை, உயிர்களைக் கொண்டுசெல்ல அமைந்த சுழி எதிர்
களன்றி வேறல்ல. இத்துன்பங்களே மனிதனையும்