பேரின்பச் சோலை
103
அவ்வழியில் மனிதனைச் செலுத்தவல்லது. இதில் அறிவு உடனடியாக மிகுதி செயலாற்ற முடியாது. ஏனெனில் தன்னலத் தளத்தில் அறிவு தன்னலம் சார்ந்ததாகவே இருக்கும்.அறிவுக்குப் பதிலாக இங்கே செயலாற்ற வேண்டுவது தன்மறுப்பு, தன்னடக்கம் முதலிய பண்புகளும் அன்பும் மட்டுமே - தன் மறுப்பு, தன்னடக்கம் முதலிய பண்புகளே அன்புக்கு வழி வகுக்கின்றன. அன்பு பொதுநலச் சார்பான பிற பண்புகளை உருவாக்குகின்றது. அறிவு இதன் பின்பே மெய்யறிவாக, மெய் யுணர்வாக உயர்வடைகின்றது.
சூழ
தன்னல அவாக்கள், தன்னல அவாக்கள் வழி செய லாற்றும் தன்னல அறிவு, தன்னல உணர்ச்சிகள், தன்னலப் பழக்கவழக்கங்கள் ஆகியவை மனிதனால் பணிவுடனும் தன் மறுப்புணர்வுடனும் ஒதுக்கித் தள்ளத் தக்கவை. ஏனெனில் அவை வாய்மையை அணுகும் தகுதியற்றவை. தன்னைச் உள்ளவர்கள் இன்பமொன்றே நாடி, வேறு பயன் கருதாமல் இவற்றை மனிதன் வேரறுக்க வேண்டும். உலக நலனுக்காக, உலகில் அழகும் இன்பமும் நிலைபெற்று ஓங்குவதற்காக, இவற்றையும் இவற்றை ஒட்டி அவர்கள் எதிர்பார்க்கும் ன்பங்களையும், உயிரையும்கூட ஒருவன் தத்தம் செய்யச் சித்தமாக வேண்டும். இவற்றை அவன் இழக்க ஒருப்பட்டால், மனமுவந்து இழக்க ஒருப்பட்டால், அந்த இழப்பே அவன்பெற்ற புதுவாழ்வுச் செல்வமாய் அமையும். வேறு நலம் அவனுக்கு வேண்டியதேயில்லை.
இவறன்மை யுடையவன் அப் பண்பைக் கைவிடுவதனால் என்ன இழப்பான்? பணத்தின் பயனற்ற சேமிப்பை இழந்து பணத்தின் பயன் முழுதும் பெறுவான். திருடன் தன் திருட்டுத் தொழிலைக் கைவிடுவதால் எதனை இழந்தவனாகக் கூடும்? தண்டனையையும் மனச்சான்றின் ஓயா வதைப்பையும் மட்டுமே இழக்க நேரிடும். தனக்கென அவன் பொருள் ஈட்டுவதற்கு, மனிதனாவதற்கே அது முதற்படியாகும். இன்ப வேடன் தன் வேட்டையை ஒழித்துவிடத் துணிந்தால் இழக்க வேண்டியது ஏதேனும் இருக்கக் கூடுமா? இன்பம் நுகர்வதற்குரிய உடல்நலம், சூழ்நிலை அதன் பின்னர்தான் அவனுக்குக் கிடைக்கிறது.