உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(102 ||

தன்னலத்தளத்துக்கும் கீழ்ப்பட்ட போலிப் பொதுநலத் தளங்கள்

அப்பாத்துரையம் - 29

தன்னல மறுப்பு என்பது உண்மையில் எளிதல்ல. தன்னல மறுப்பால் பொதுநலமும்,பொதுநல மூலம் தனக்கே மிகுநலமும் விளையும் என்ற அறிவுகூட உண்மையில் தன்னல மறுப்புக்கு உதவாது. ஏனெனில் இவ்வறிவும் தன்னல அறிவேயாகும். தன்னலத்தை நீக்கிப் பொதுநலமாக்கும் பண்பு பயன்படும் அளவு, பொதுநலத்தையே தன்னலமாக்கும் இப்பண்பு பயன் படாது. ஏனெனில், பொதுநல நோக்கிய தன்னலம் தன்னலத் தளத்தைவிட எவ்வளவோ உயர்ந்தது. ஆனால் தன்னல நோக்கிய பொதுநலமோ தன்னலத் தளத்தினும் எவ்வளவோ தாழ்ந்தது. தன்னலத்தை அகத்தே கரந்து, பொதுநலம் பேசிப் பிழைக்கும் போலிப் பொதுநலவாதிகள் பலர் இதனாலேயே தன்னலத் தளமாகிய உயர்விலங்கு அல்லது மனித தளத்துக்கும் கீழ்ப்பட்ட கீழின விலங்குத் தளத்துக்கு உரியவராய்விடுகிறார்கள்.

போலி அறவோர்கள் நிலையும் இதுவே.

தன்னலத்துடன் அறியாமையும் மேற்கொண்ட சிலர் வேறோர் உலகில் தமக்குப் பெருநலம் கிடைக்க வேண்டுமென்று எண்ணி இங்கே நற்செயல் விதைக்க எண்ணுகின்றனர். இன்னும் சிலர் தன்னலத்துடன் அறிவும் மேற்கொண்டவராய்ப் புற உலகில் புகழும் அப்புகழுடன் பெருமையும் பெரும்பேறுகளும் பெற எண்ணி நற்செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்கள் நிலை எதுவும் சிந்தியாத பொதுமனிதன் நிலையைவிட உயர்ந்ததாகத் தோற்றினாலும், உண்மையில் உயர்ந்ததன்று, தாழ்ந்ததேயாகும். ஏனெனில் பொதுவாக மக்கள் தன்னலமே உடையவர். இவர் களோ தன்னல நோக்குடன் பொதுநலம் பாவித்துத் தன்னலமே பெருக்குபவராவர்.

தன்மறுப்பு, தன்னடக்கம், அன்பு

தன்னலத் தளத்திலிருந்து பேரின்பத்துக்குரிய பொதுநலத் தளத்துக்குச் செல்லக் குறுக்கு வழிகள் எதுவும் கிடையாது. பயனை எதிர்பாராது துறத்தல், தன்னல அவாவையும் அதனால் எதிர்பார்க்கப்படும் பயனையும் ஒருங்கே இழத்தல் ஒன்றே