உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

101

என்று மதிக்கும்போதுகூட, அது தரும் பேரின்பம் அல்லது துறக்கம் (பொன்னுலக இன்பம்) இவ்வுலகத்துக்குரியதன்று, வேறோர் உலகத்தது என்று போலிச் சமயவாதிகள் கூறுவதை நம்பி ஏமாறுகின்றனர். ஆனால் துறவினால் பெறத்தகும் இன்பம் இவ்வுலகிலேயே பெறும் இன்பம், இந்த வாழ்விலேயே பெறும் இன்பம், இந்த வாழ்விலேயே பெறும் இன்பம். அதன் உயர்தளம் கருதியே கவிஞர் அதை மேலுலகம், பொன்னுலகம் எனப் புனைந்துரைத்தனர். போலிச் சமயவாதிகளும் அவர்களைப் பின்பற்றிய பாமரரும் அப்புனைந்துரையின் மேலீடான சொற் பொருள் கொண்டு உணர்ந்து தடுமாறுகின்றனர்.

தன்னல இன்ப நுகர்வில் ஈடுபட்டவர்கள் அதையே இன்பமாகக் கருதுகின்றனர். அதைப் பேறென்று கருதி அதற்காக உழைப்பது அறிவுடைமை என்றும் எண்ணுகின்றனர்.அதனைத் துறப்பது மடமை, பயனற்ற அல்லது விரும்பத்தகாத செயல் என்று கொள்கின்றனர். இனிய பழத்தைத் துறப்பதால் இனிமை நுகர்வை இழந்து விடுவதாக, இன்பப் பொருளை இழப்பதால் இன்ப நுகர்வையே இழப்பதாக அவர்கள் முடிவுகட்டி விடு கின்றனர். துறவு என்பது துன்பத்தை வருந்தி அழைத்து மேற்கொள்ளப்படும் செயலென்று அவர்கள் கருதுவதன் காரணம் இதுவே. ஆயினும் உணவைத் துறப்பவன் பசியைத் துறப்பதில்லை. அதன் மூலம் பசி மிகுந்து உணவின் சுவையும், அதைச் செரிமானம் செய்து உடலாற்றல் பெருக்கும் இயல்பும் வளர்கின்றன என்பதை அறியாதார் இல்லை.

சுவை கருதி உண்ணாமல் பசி கருதி உண்ணுபவனுக்குப் பசி தீர்ந்து உணவின் சுவை நுகர்வும் மிகுதியாவது போல, தன்னல இன்பப் பொருள்களை விலக்கி, இன்ப அவாவைக் குறைப்பவன், அந்த அவாக்களிலிருந்து விடுபட்டு, உயர் இன்பமும் பெறு கிறான். தன்னை மறுத்துப் பிறருக்கென அவன் செய்யும் செயல் களெல்லாம் பிறர்க்கு மட்டுமன்றி அவனுக்கும் எதிர்பாராப் பெரும்பயன் தருகின்றன. ஏனெனில் பிறருக்குச் செய்யும் செயலே பிறரும் அவனும் உள்ளிட்ட இனம் வளர்த்து, அவன் அடிப்படை நலம் ஆகிறது.