பேரின்பச் சோலை
129
உணர்ச்சிப் புயல்களின் கொந்தளிப்பில் அல்லலுற்ற உயிர்களின் செல்லல் நீக்கும் இன்ப இளவேனிலகம் அதுவே!
தன்னை மறுக்கும் பண்பு உச்ச உயர்நிலையான மெய் யறிவும் எல்லையிலா மெய்யின்பமும் அளிப்பது. ஆனால் எத்தனை பெருஞ்செயல், புகழ்ச் செயலானாலும் ஒரே செயல் கொண்டு அதனை ஒரேயடியில் பெற்றுவிட முடியாது. ஏனென்றால் அது அக வளர்ச்சியால் மட்டுமே பெறத்தக்க அக இன்பம். அவ்வக வளர்ச்சியைப் படிப்படியாகவே தூண்ட முடியும். பயிர்கள்போல அது காலத்தில் நீடித்துப் பயில வேண்டிய, பயிர்ப்பிக்க வேண்டிய நீள் செயலாகும்.
படிப்படியாக அவ்வக வளர்ச்சியை, அகப் பயிர்ப்பைத் தூண்டும் செயல்கள் பெருஞ்செயல்களல்ல, சிறு செயல்களே. அதுமட்டுமன்று. செயல்களைவிடச் செயல் மறுப்புக்களே அவ்வகப் பண்புகளை, அகத் தன்மறுப்புக்களைத் தூண்ட வல்லன. அத் தன்மறுப்புக்களும் பெருந் தன்மறுப்புக்களல்ல. ஆரவாரத் தன்மறுப்புக்களல்ல; ஓசைபடாத சின்னஞ்சிறு தன்மறுப்புக்களே!
இச் சிறு செயல்கள் பல. அவை காலங் கடந்து நீடித்துப் பயில்வதனாலேயே பயிர்ப்பு என்றும், அவற்றின் பயனாக ஏற்படும் விளைவுகளும் காலங் கடந்த நீடித்த பயன்களாதலாலே பண்புகள் என்றும் அழைக்கப் பெறுகின்றன.
பண்பு, சால்பு ஆகியவற்றின் எல்லையற்ற விரிவே அருள் - கடவுளின் - பேரின்பத்தின் கால இடம் கடந்த இனப் பேரகற் சிக்கு மிகவும் அணித்தான பண்பு அதுவே!
பொய்மை தன்னலப்பண்பு,
வாய்மை தெய்விகப் பொதுமைப்பண்பு
வாய்மை
-
தன்னலம்! வாய்மைக்கெதிரான பண்பு பொய்ம்மை. ஆனால் உண்மையில் பொய்ம்மை என்பது பொதுவாக உணரப்படுவதுபோல இல்லாத தன்மை என்ற பொருளுடையதன்று.போலித்தன்மை என்பதே அதன் குறிப்பு. இப் போலித் தன்மை தன்னலத்தாலேயே ஏற்படுகிறது.
உலகு ஒன்று, உயிர்கள் பல. உலகம் உயிர்களுக்குரியது. ஆனால் ஒவ்வோர் உயிரும் உலகைத் தன் காட்சி கொண்டு ஒரு