உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

141

அகவாழ்வின் அமைதியடைந்தவர்களுடன் தொடர்புகொண்டு அவர்களுடன் நடந்தும், அவர்கள் வழிகாட்டப் பின்பற்றியும் அகப் பண்புகளின் சூழல்களில் உலவுகிறான். புனிதமாகிய இப் பூங்காவின் தென்றலில் திளைத்தபின், புயலும் தூசியும் அவனை அணுகுவதில்லை. நாற்றமும் வெப்பும் மறந்த செய்திகளா கின்றன. அவன் எதையும் மறுப்பதில்லை, வெறுப்பதில்லை, கண்டிப்பதில்லை, தடுப்பதில்லை. அவன் அன்பு எல்லாவற்றை யும் அணைக்கிறது. தீய புறச் செயல்களின் நிழல் கண்டால்கூட, அவன் அகன்ற நெஞ்சம் பொறுமையும் அருளிரக்கமும் கொண்டு, அன்புக் கனிவிலேயே அதைக் கரைத்து விடுகிறது.

அகவாழ்வின் ஒளி கண்டவன் மற்ற அகவாழ்வுச் செல்வர் களைத் தமக்குப் புறம்பான அயலவர்களாகக் கொள்வதில்லை. ஏனெனில் அவர்கள் பண்பு அவன் பண்பே. அப் பண்பின் மலர்ச்சிப் படியில் அவர்கள் சற்று முன் பின்னாக இருக்கலாம். ஆனால் இஃது அவர்கள் ஒற்றுமைக்கு, ஒருவருடன் ஒருவர் ஒத்துழைப்பு உதவிக்கு உரியதேயன்றி வேறன்று. அவர்கள் நலங்கள் ஒன்று. அவன் பண்பு அவர்கள் பண்பின் ஒரு துணைக் கூறு, துணைப்பகுதி.

அவன் செயலில் அவர்கள் தங்கள் செயலைக் காண் கின்றனர். அவர்கள் செயலில் அவன் தன் செயலைக் காண் கிறான். ஒருவர் குறையில், பண்பில் அவர்கள் ஒவ்வொரு வரும் தத்தம் குறையை, தத்தம் பண்பைக் காண்கின்றனர். எனவே ஒவ்வொருவர் செயலிலும் அனைவர் பண்பும் ஒத்துச் செய லாற்றுகிறது. அகவாழ்வில் புதிது புகுந்தவன் பண்பாற்றல் வ்வாறு அகவாழ்வுலகத்தின் முழு ஆற்றலாக, கடவுளாற்ற லாகச் செயற்படுகிறது.

46

'இயற்கையின் பொன் ஆற்றலின்ஓர்

இனிய துகள் உலகம்

யாவும் ஒரு பொன்னுலகம்

ஆக்கி விடு மன்றே!

உலகம் ஒன்றே - பண்பும் ஒன்றே!

உலகம் ஒன்று. ஒரே சங்கிலிக்கோவை. ஒவ்வோர் இனமரபும் பெரிய இனமரபும் சிறிய இனமரபும் - அதன் ஒரு -