உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(142) ||.

அப்பாத்துரையம் - 29

சங்கிலி அல்லது கிளைச் சங்கிலி. தனி மனிதன் அச்சங்கிலியின் ஒரு கண்ணி மட்டுமன்று, சங்கிலியைச் சங்கிலியுடன் பிணைத்து, சங்கிலிக் கோவையிலும் ஒரு கண்ணியாய் அமைகிறான்.என எனவே தான் தனி மனிதன் பழி தன் மனிதன் பழியாய் நின்று விடுவ தில்லை. அது தனி மனிதன் கடந்து பழியலை எழுப்பி இனப் பழியாகவும், இனப் பழியலை எழுப்பி உலகப் பழியலையாகவும் பரவிக்கொண்டேயிருக்கின்றது. இதுபோலவே தான் தனி மனிதன் பண்புகளும் அவையும் தனி மனிதன் பண்புகளாய் நின்று விடாமல், தனி மனித உள்ளம் கடந்து இனப் பண் பலைகளாகவும், இன எல்லை கடந்து உலகப் பண்பலை களாகவும் பரவிக் கொண்டே இருக்கின்றன.

தனி உயிர்களெல்லாவற்றிலும், இனப் பரப்பெங்கும், உலகப் பரப்பெங்கும் சரிசமநிலை வளர்க்கும் இந்தப் பண்பலைகளில் ஏற்றத் தாழ்வுகள் உண்டு - அதை வளர்ப்பவர் அகவாழ்வொளி காணாது புறவாழ்வு வாழும் பெரும்பாலான மக்களே. அகப் புறத் தொடர்பு காணாத அவர்கள், அகவாழ்வில் அனைத்துலகமும் ஒன்று என்பதை உணராத அவர்கள், புறத்தே தம்மைச் சுற்றித் தனித்தனி தன்னலச் சுவர்கள் வளர்த்து, அதிலே தனித் தனியாக அகம் சாராப் புறவாழ்வு வாழ்கின்றனர். அகத்தே நிலவும் அடிப்படைச் சமத்துவத்தின்மீது புறத்தே மேலீடான உயர்வு தாழ்வுகள் உலகில் நிலவுவதன் காரணம் இதுவே.

பிறரைவிடத் தான் உயர்ந்தவன், தெய்வத்தன்மை, புனிதப் பண்புமிக்கவன் என்று நினைப்பவன் உண்மையில் தெய்வத் தன்மை, புனிதப்பண்பு உடையவனல்லன். அதைப் பரவ வொட்டாமல் தடுக்கும் இருளின் ஒரு பிரதிநிதியாக மட்டுமே, இருளைப் பரப்பும் ஓர் இருண் மகனாக மட்டுமே அவன் வாழ்கிறான். மனித இனம் அனைத்தும் ஒன்று - பழிகாரனும் ஞானியும், பக்தனும் உலகியலாளனும், ஆத்திகனும் நாத்திகனும் ஒரே தெய்வப் பண்பின் பொறிகள் என்று கருதுபவனே தெய்வப் பண்புடையவன். அவனே உலகை வாழவைத்துத் தானும் வாழ்பவன், 'வாழ்வாங்கு வாழ்'பவன். அவனைச் சுற்றியே தெய்வ ஒளி உலவும்.