உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

பழிகாரரைப் பழிப்பவரே பழிகாரர்கள்!

143

உலகின் பழிகள், மனித இனத்தின் பழிகள் அத்தனை யையும் தம் தலைமீது தாங்கிக் கொண்டார் இயேசு பெருமான் என்று கூறப்படுவதுண்டு. இஃது உவமை வடிவில், அழகிய உருவக வடிவில் தரப்படும் அக வாழ்வின் ஒரு பேருண்மையே யாகும். அருள்நிலை யடைந்தவர் அப்பெருமான். பழிகாரரிட மிருந்து தம்மை வேறு பிரித்துணராமல், அவர் பழிகாரருடன் தம்மைப் பழிகாரராக்கிக் கொண்டு, அவர்கள் அனைவர் பழியையும் தம் பழியாக மேற்கொண்டு, அவற்றின் தண்டனை களனைத்தையும் தாமே ஏற்றார்.

மனித இன முழுவதனுடனும் இயேசுபிரான் காட்டிய இவ்ஒத்துணர்வே அவர் வாழ்வைத் தெய்வீக வாழ்வு ஆக்கிற்று. ஆ னால் அத்தகைய ஆழ்ந்த ஒத்துணர்வு அற்றவர்கள் அவரையே விலக்கினர், அவரையே தண்டனைக்கு ஒப்படைத்துத் தாம் ஒதுங்கி நின்றனர். உண்மையில் அவ்வாறு அவரை விலக்கி, அவர் தண்டனைகளிலிருந்தும் ஒதுங்கி வாழ்பவர் அவர் காலத்தில் வாழ்ந்த அவர் பகைவர்கள் மட்டுமல்லர்; அக்காலத் திலும் இக்காலத்திலும் அவர் பெயர் கூறுபவரிடையேகூட மிகப் பலர் உண்டு.

-

பழிகாரர்களையும் பாவிகளையும் பழிகாரர், பாவிகள் என்று ஒதுக்கி வைப்பவர்களெல்லாம் ஆன்மிக வாழ்வில் யேசுபிரானைக் காட்டிக் கொடுப்பவர்களே கடவுட் பகைவர்களே! அப்பகைவர்களையும் பகைக்காதவர்களே இயேசு வழி நிற்பவராவர்.

'பழிகாரர்களா? அப்படி ஒருவரும் உலகில் இருக்க முடியாது. வேண்டுமானால், ஒருவனைப் பழிகாரன் என்று கூறுபவன்தான் பழிகாரனாய் இருக்க முடியும்!' என்றார் விவேகானந்த அடிகள்.

பழிகளிலெல்லாம் தலையான பழி ஒத்துணர்வின்மைதான். அதனுள்ளும் மிக மோசமான பழி பழிகாரனிடம் ஒத்துணர் வில்லாமையே. ஏனெனில் மனித இனத்திலே முதன்மை நிலை யில் ஒத்துணர்வுக்கு உரியவர்கள் அவர்களே - ஞானிகளல்லர்,