166
அப்பாத்துரையம் - 29
நினைக்க நேரமில்லா அடைகிறான்.
டையறா இன்பத்தை அவன்
நம் உலகின் தன்னலப் போட்
டிகள்
பொறுதி என்னும் பொன்னார்ந்த செல்வத்தின் அருமையை அறிய விரும்புபவன் அதற்காக வேறெங்கும் செல்ல வேண்டுவ தில்லை. அந்த ஒரு செல்வம் இல்லாமல் மற்ற எல்லா வகைச் செல்வங்களும் திரட்டி வருகிற நம் கால உலகைக் கண்டால் போதும்.
தனி மனிதருக்குத் தனி மனிதர், சமுதாயத்துக்குச் சமுதாயம், நாட்டுக்கு நாடு இன்று எங்கும் எப்போதும் ஓயாத போட்டியும் பழி எதிர்பழிச் செயல்களும் செய்த வண்ணம் இருக்கின்றன. இதனால் தனி மனிதரிடையேயும், சமுதாயங்கள், நாடுகளிடை யேயும் எத்தனை எத்தனை இதய வேதனைகள், எவ்வளவு வெந்துயர்க் கண்ணீர்கள், எவ்வளவு வேற்றுமைகள், பூசல்கள், தப்பெண்ணங்கள்? எவ்வளவு குருதியாறுகளையும் குருதிக் குளங்களையும் வை பரப்பி உலகைப் போர்களுக்கு இரையாக்குகின்றன?
இவற்றை ஒழிக்க, இத் தீங்குகளை விலக்க அல்லது அவற்றி னின்று விலக வழி உண்டா?
உண்டு. அவற்றை நீக்க விரும்பினாலும் அவற்றிலிருந்து நீங்க விரும்பினாலும், இரண்டுக்கும் வழி ஒன்றுதான்! அது விலக்கு பவனை அச்சூழலிலிருந்து விலகி அமைதி பெற மட்டும் வழிவகுப்ப தன்று, அச்சூழலை மாற்றியமைக்கவும் வகை செய்வது.
அவ்வழி வேறு எதுவுமன்று அப் பூசல்களுக்கு, குருதி யாறுகளுக்கு மூல காரணமான போட்டியுணர்ச்சிகளை, பழி எதிர்பழி உணர்ச்சிகளைத் தனி மனிதன் அளவிலேனும் விலக்குவதே! இது செய்வதற்குக் கால இட வாய்ப்புப் பார்க்க வேண்டுவதில்லை. சூழல் மாற்ற, பிறருக்குப் போதிக்கத் தேவை யில்லை மாற அல்லது மாற்ற விரும்புபவன் தன்னளவில் மாறினால் போதும். உடனே அவன் தன் வாழ்வில் மட்டுமன்று, உலகப் பொது வாழ்விலேயே மாறுதலைக் காண முடியும். முழுமாறுதல் அதன்பின் எளிது. அது காலத்தின் செயல், இயற்கையின் அமைதி ஆய்விடும்.