பேரின்பச் சோலை
167
தன்னலப் போட்டியின் விளைவு அழிவு. பழி எதிர் பழி யாருக்கும் நலம் தருவதில்லை. இவற்றை நீ உணர்ந்து உன் மனத்தில் கோபதாபம், தன்னலப்போட்டி, ஆதிக்க வெறி அகற்று. தீமைக்கு எதிராகத் தீமை செய்யாதே. நன்மை செய். தீமையை மிதித்தழித்துவிடு. மன்னித்ததுடன் அமையாமல் மறந்துவிடு. மறந்ததுடன் அமையாமல் அதன்மீது அன்புப் பயிர் வளர். இது செய்தபின் உன் உலகம் மாறும். உலகம் அதன்பின் உன் உலகமாக மிளிரத் தொடங்குவதைக் காண்பாய் புயலில் கொந்தளிக்கும் நீர் மீது எண்ணெய்போல், அது படிப்படியாகப் போட்டியின் அழிவாற்றலை வென்று, உலகை ஓர் உலகமாக்கிவிடும்.
2‘வாழும் உயிர்கள் மீதெலாம் சூழ்க உன்றன் உயிர்ப்பாசம்! ஆழ்க உள்ளக்கடுமை சினம் வீழ்க பெரும்பேரவா வெறிகள்! மாழ்கும் உனது வாழ்வு உலகச் சூழலதுவும் விரைந்து அதன்பின், ஏழ்கொள் இசையின் இனிமையுடன் தாழ்வில் தென்றல் எனமிளிரும்!
அறிவு குருடாக்கும் பண்புக்கேடு
பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற உணர்ச்சியிலிருந்து எதையும் பொறுத்தருளும் பண்புக்குச் செல்லும் பயணம் இருளிலிருந்து ஒளிக்கு, அறியாமையிலிருந்து அறிவுக்குச் செல்லும் பயணம் ஆகும். அறிவின் தடம், அறிவின் நிழல் படிந்த எந்த உள்ளமும் பழிக்குப் பழி வாங்கும் எண்ணம் உடையதாய் இருக்க முடியாது. செறிந்த அறியாமை இருளில் உழலும் உள்ளமே அந்த எண்ணத்துக்கு இடம்தரும். ஆனால் இவ் வறியாமை உண்மை அறியாமை, திண்ணிய அறியாமை.
னெ
னில் அதில் உழலும் உயிருக்குத் தன் அறியாமை தெரியாது. தன்னைச் சூழ்ந்துள்ள அறியாமை இருள் எவ்வளவு செறிவுடையது என்பதும் அதற்குத் தெரியாது. இருளைவிட்டு ஒளிக்கு, அறியாமைச் செறிவைவிட்டு நிறையறிவுக்கு வந்தபின் தான் அஃது அதனை மதிப்பிட்டுணர முடியும். ஏனெனில் அறியாமையை அறிவதே அறிவின் தொடக்கமாகும்.