168
அப்பாத்துரையம் - 29
அறியாமையை மதிப்பிட்டறிவது அறிவின் நிறை பருவத்தி லேயே முடிவது. அறிவொளியில் மனிதன் உலவுந்தோறும், அதில் முன்னேறுந்தோறுமே அவன் தன் பழைய அறியாமை இருளின் செறிவை உணர்கிறான். இதை உணர உணர, தன் பழைய நிலையில் அறியாமையில் உழலும் உயிர்கள் மீது அவன் ஒத்துணர்வும் இரக்கமும் வளர்கின்றன. பிறருடன் ஒத்துணர்வு காட்டுவதன் மூலம் அவன் அறிவு வளர்கிறது. அறிவு வளர்வதன் மூலம் ஒத்துணர்வும் பெருகுகிறது.
மனிதன் இயற்கையாகக் குருடனல்ல, அதை ஒரு நோயாக அவன் வருவித்துக்கொண்ட பின்னரே குருடனாகிறான். இது போலவே அக குருட்டுத்தனமாகிய மடமையும் மருட்சியும் இயல்பானவையல்ல. மனிதன் தன்னுடைய இருளார்ந்த, பழி சார்ந்த போக்குகளாலேயே அவற்றை வரவழைத்துக் கொள் கிறான். வந்தபின்னும் அதை விட்டொழிக்க முடியாதென் றில்லை. அது எளிது. மன்னித்தருளாக் கடுமையை விட் டொழிப்பது ஒன்றினாலேயே அது கைகூடும். ஏனெனில் அத்தீமையுடன் சேர்ந்தே தற்பெருமையும் வேறுபிற உணர்ச்சி வெறிகளும் இயங்குகின்றன.
பழிகளைப் பெற்ற தாய் தந்தை
உலகில் தானே முக்கியமானவன், தனக்காகவே உலகம் இயங்குதல் வேண்டும் என்று தற்பெருமையுடையவன் எண்ணு கிறான். உலகத்துக்கெதிராக, உலகத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துப் பேணிவிட அவன் திட்டமிடுகிறான். அவன் மன்னித்தருள இணங்காததன் காரணம் துவே. இத் தற் பெருமையிலிருந்தே பொறாமை, சீற்றம், பகைமை, வன்மம் முதலிய மற்ற உணர்ச்சி வெறிகள் தோன்றுகின்றன. மன்னித் தருளும் பண்பால் இவையும் மெல்லக் கட்டவிழ்கின்றன. உயர் அறிவு, உயிர் இன்பம் ஆகியவற்றின் முழு அழகும் முழு அளிவும் அவன் வாழ்வில் பரவுகின்றன!
பழி எதிர்பழி மனப்பான்மை, தற்பெருமை ஆகிய இவையே மற்றப் பழிகளுக்கெல்லாம் தாய், தந்தை போல்வன. பழி எதிர் பழி மனப்பான்மையுடையவன், தற்பெருமையுடையவன் பெரும் பழிகள் வகையில்தான் எதிர்பழி செய்கிறானென்பதில்லை. பெரும் பழிகளைவிட, சிறு பழிகள், சிறு பகைமைகள், தற்