பேரின்பச் சோலை
169
செயலான ஏளன அவமதிப்புக்கள் ஆகியவை அவன் சிடு சிடுப்பையும் கடுப்பையும் வளர்த்து, இச்சிறுபழிகளுக்கு எதிராகப் பெரும்பழிகளே செய்யத் தூண்டுகின்றன. இச் செயல் பொதுநிலையான பழி எதிர்பழி மனப்பான்மையை விட மோச மானது. ஏனெனில் இங்கே பழிச் செயலுடன் நேர்மைக் கேடு, கோழைமை கலக்கின்றன. பழிச் செயலுடன் நேர்மைக் கேடு, கோழைமை கலக்கின்றன. பழி எதிர்பழியால் வரும் அமைதிக் கேட்டை விட, சீற்றத்தைவிட, இச் செயல் செய்பவனிடம் மிகுதியான அமைதிக் கேடும் சீற்றமும் வளர்கின்றன. அவன் உள்ளம் மிக விரைவில் தன்னம்பிக்கையிழந்து குள்ளத்தனம் உடையதாகிறது.
தன்னம்பிக்கைக்கேடும் குள்ளத்தனமும் தீமையில்கூட ஒரு கீழ்ப்படித்தீமைக்கு மனிதனை இட்டுச் செல்கின்றன. மற்ற உணர்ச்சி வெறிகள் அறிவாற்றல் குன்றியவை, ஆனால் உணர்ச்சி யாற்றல் உடையவை. இந்தப் படியடைந்த மனிதன் பண்பு களிலோ இரண்டு ஆற்றல்களும் கிடையா. இதன் பயனாக, தீமையில் தீமை அல்லது இரட்டிப்புத் தீமையான புறங்கூறல், பொய்ம்மை, வஞ்சகம், போலி நடிப்பு ஆகிய பண்புகளை அவன் கையாண்டு அவற்றின் குள்ளத்தன்மைக்கு மேலும் மேலும் ஆளாகிறான். மனிதப் படியிலிருந்து விலங்குப்படிக்கு மட்டு மன்றி, விலங்குப் படியினின்றும் இன்னும் இழிபடிகளுக்கு இது அவனை இட்டுச் செல்கிறது.
தற்பெருமையும் செருக்கும்
தற்செருக்கால் மருட்சியுற்று விழிக்குருடானவனுக்கு மற்றவர்கள் செயல்கள், நிலைகள் யாவுமே குற்றத்துக் குரியனவாக, பகை வெறுப்புச் செயல்களாகத் தோற்றும். அவன் செருக்கின் அளவில் அக்கற்பனைப் பகைமை பெரிதாக உரு வெடுக்கும். கடுஞ்சீற்றங்கள் தளர்ச்சியை உண்டு பண்ணும். ஓயாத சிறு சீற்றங்கள் நிலையான கடுகடுப்பை ஏற்படுத்தும். இவை மேன்மேலும் ஒருவனை இருளில் தள்ளித் துன்பம், தன்மயக்கம் ஆகியவற்றுக்கு ஆளாக்கும்.
பழி சூழ்பழிகளாகிய இவற்றால் புண்படாதே. உன் உணர்ச்சிகள் இவற்றால் அமைதி குலையும்படி விடாதே. அதே