உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




176

அப்பாத்துரையம் - 29

"பேரரசே,உயிர்காக்கும்படி மன்றாட வேண்டியவன்

நானே. என்னைத் தேடிக் கொல்வதற்காக நீங்கள் பல ஆண்டுகள் அரும்பாடுபட்டிருக்கிறீர்கள்.இப்போது நீங்கள் என்னைக் கண்டு கொண்டீர்கள். என் உயிரைக் காக்கும்படி நான் தங்கள் முன் மன்றாடுகிறேன்." என்றான் அவன்.

அந்தக் கணமே பிரமதத்தனும் தீர்க்காயுவும் ஒருவர் உயிரை ஒருவர் காப்பதாக வாக்களித்தனர். அந்தக் கணமே இருவரும் கைகோத்து ஒரு நாளும் ஒருவருக்கு ஒருவர் எவ்வகைத் தீங்கும் செய்வதில்லை என்று உறுதி மேற்கொண்டனர். தீர்க்காயு காட்டிய பெருமித மன்னிப்புப் பண்பு கண்டு பேரரசன் அவன் மீது பெருமதிப்புக் கொண்டான். அதன் பயனாக, அவன் தீர்க்காயுவுக்குத் தன் புதல்வியையே மணஞ் செய்து கொடுத்து, அவன் தந்தை அரசையும் அவனுக்கே வழங்கினான்.

'வெறுப்பை வெல்வது வெறுப்பன்று, மன்னித்தருளும் பண்பே' என்பதையும் அந்த மன்னிப்பே ஒப்புயர்வற்ற அழகு வாய்ந்த பண்பு என்பதையும், பழிக்குப் பழி வாங்கும் செயலை விட அதுவே பன்மடங்கு நிறைவெற்றி தருவது, இனியது என்பதையும் இவ்வரலாற்று நிகழ்ச்சி காட்டுகிறது.

தெய்விக அன்புக் கடலின் நிலவார்ந்த கரை

மன்னிப்புப் பண்பே அன்பின் வாயில் - கைம்மாறு நாடாத தெய்விக அன்புக் கடலின் நிலவார்ந்த கரை அது. அதை மேற்கொள்பவன், அதில் நீடித்துப் பழகிப் பயிர்ப்புப் பெறுபவன், அதன்மூலம் தன்னிறைவு நாடுபவன் பேரின்ப ஒளியைத் தன்னுள் பாய விடுகிறான். தற்பெருமையும் பொறுப்பும் பழி எதிர் பழியார்வமும் சென்று தீண்டாத ஓர் உச்ச உயர்தளத்தில் அவன் செம்மாந்து மிதக்கிறான். மாறாத அமைதி என்னும் தென்றல் நுகர்ந்து, எல்லையற்ற பெருவெளி எங்கும் பரவவல்ல அன்பு என்னும் தண்ணிலாக் கதிர் பரப்புகிறான்.

நீடித்த பயிர்ப்பினால் பெற்ற மன்னிப்புப் பண்பு கூட இத்தளத்தில் அவனுக்குத் தேவைப்படாததாகிவிடுகிறது. னன்றால் அவன் அன்பு ஒளி பரவிய இடத்தில் மன்னிப்ப தற்குரிய பழி எதுவும் அணுகுவதில்லை. அவன் அன்பலைகளுக்கு ஆட்பட்டவர்கள் எதையும் பழியாகக் காண்பதுமில்லை. அவன்