உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

177

செயலின்றியே, அவன் அருளொளிக் கதிர்கள் கடவுட் பண் பலைகளாக உலவிப் பழிகளுக்கு மூலமான அறியாமை அகற்றும். அறியாமை அகற்றிப் பழி விலக்கும் மன்னிப்புப் பண்பைப் பரப்பும்.

இதுவே

அன்பு, சரி சம அன்பு, எல்லையற்ற அன்பு இயற்கையின் இன்ப அமைதி. இது முழுநிறை அமைதி, இதன் தங்குதடையற்ற ஒளி இயக்கமே வாழ்வு. இதிற் குறைந்த எல்லா நிலைகளும் இதைநோக்கி முன்னேறும் நிலைகளே. பண்புகள் என்பவை இம் முன்னேற்றத்துக்கு உதவும் கருவி கலங்கள், வழிகாட்டிகள் - பழிகள் என்பவை அம் முன்னேற்றத்துக்கு டையே ஏற்படும் தயக்க மயக்கங்கள், தடைகள், தவறான பாதைகள், தவறான வழிகாட்டிகள் - அவ்வளவே!

மன்னிப்புப் பண்பு இப்பேரமைதியின் எல்லையில் நேரே செல்ல வழிகாட்டும் ஒரு திறந்த வாயில் ஆகும்.

அடிக்குறிப்புகள்

1. "If men only understood

2.

All the emptiness and aching Of the sleeping and the waking Of the souls they judge so bindly,

They, with gentler words and feeling, Would apply the balm of healing- It they only understood

Kindness, nobler ever than revenge.

"Have good-will

To all that lives, letting ukindness die

=

Shakespeare

And greed and wrath; so that your lives be made Like soft airs passing by."