பேரின்பச் சோலை
191
தயக்கம், ஐயம், குழப்பம் அடைபவர்களுக்கு இவ் விரு சான்றுகளும் எச்சரிக்கைக் கற்கள் ஆகும்.
தீய பழக்கங்கள், பொய்ம்மை ஆகியவை பற்றிய இதே விளக்கங்கள் எல்லாப் பழிகளுக்கும் பொருந்தும் - சிற்றின்ப வேட்கை, வெறுப்பு, பகைமை, பொறாமை தற்பெருமை, செருக்கு, தன்நெகிழ்வு ஆகிய எல்லாத் தீங்குகளுக்கும் தன்னலத்தின் எல்லா உருவங்களுக்கும் பொருந்தும். எல்லாப் பழிகளும் உள்ளத்தில் நிலவும் ஆன்மிக இருளின், மடமையின் அறியாமை யின் பரவவொட்டாமல் தடுக்கும் ஒவ்வொரு சந்து பொந்து, மூலை முடுக்குகளே. இந்த இருள் பொதுவாக அறியாமை வடிவிலும், சிறப்பாகச் செறிவுற்ற இடங்களில், இடங்களில், ஆராயா நம்பிக்கைகளாகவும் காட்சியளிக்கிறது.
இன்ப துன்ப அனுபவங்களில் புத்தறிவு நாடுவதன் மூலமும், ஆராயா நம்பிக்கைகளை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி அக உணர்வு கொளுத்துவதன் மூலமுமே ஒருவன் தன் இதயத்தில் நிலவும் தீமையின் இயல்பை உள்ளவாறு உணர முடியும். நம்பிக்கை சார்ந்த அறிவு, கேள்வி முறை சார்ந்த அறிவு ஆகிய இரண்டும் அனுபவ அடிப்படையான அறிவு, ஆராய்ச்சி அடிப்படையான அறிவு ஆனபின், ஒருவன் புறத்தீமைகளைக் கண்டிக்க முற்பட மாட்டான்.அவற்றைத் தீமை என்று கருதவே ஒருப்படமாட்டான். தீமை செய்பவனையும் தீயவன் என்னாது அனுபவ அறிவற்றவன் என்ற முறையில் அவனை உயிர் மலர்ச்சியில் பிள்ளைப் பருவத்தினனாகக் கருதி அவன்மீது அன்பிரக்கமும் அருட்பாசமும் கனிவும் மட்டுமே கொள்வான். உரிமை, கடமை: பண்பின் பொங்கல் வளம்
தீமையின் கடைசிக் கூறாக ஒன்றை நாம் இப்போது ஆராய வேண்டும். அதுவே தனிப்பட்டவன் உரிமை என்பது.
ஒவ்வொரு மனிதனுக்கும் தான் செய்வதற்குரிய செயலைத் தேர்ந்துகொள்ளும் உரிமை உண்டு. அதுபோல அந்தச் செயலின் பயனை, தன் தேர்வின் பயனை, முழுதும் தானே பொறுப்புடன் ஏற்று, அவற்றின் அடிப்படையில் அடுத்த தேர்வை அமைத்துக் கொள்ளும் கடமையும் அவ்வுரிமையாலேயே ஏற்படுகிறது. இது அகப் பண்புகளை உருவாக்கும் அகக்கடமை, அக உரிமை