உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




192

அப்பாத்துரையம் - 29

வளர்ப்பதும் இதுவே. இந்த அக உரிமை, அகக்கடமை இரண்டும் சேர்ந்தே புற உலகில் தன்னுரிமை ஆகின்றன.

இதற்கேற்ப ஒரு புறக் கடமையும் உண்டு. தன் செயலைத் தானே தேர்ந்துகொள்ளும் உரிமை, தன் அகப் பண்பைத் தானே ஆக்கிக்கொள்ளும் உரிமை தனக்கிருப்பதுபோல, பிறருக்கும் உண்டு என்பதை அவன் உணர வேண்டும். அதில் அவன் தலையிடக் கூடாது. தலையிட்டால், அதுவே தவறு, தீமை, பழி ஆகிய எல்லாமாகும். இவற்றிலிருந்து விலகிய அளவே அவன் தன்னுரிமை பயன்படும். அதுமட்டுமன்று, அத்தன்னுரிமையின் முழுநிறை பயனையும் அவன் நுகர வேண்டுமானால், தன் உரிமையைத் தான் பயன்படுத்துவதுடன், பிறர் உரிமையை ஊக்கும் வகையில் அவ்வுரிமையைக் கையாளவும் வேண்டும். இதுவே தற்பண்பு ஆகும். தன்னுரிமையை மன்னுரிமையாக்கி வளம் பெருக்கும் பொங்கற் கூறு இதுவே.

பிறரிடம் தீமை காண்பது தவறு. அது மன்னுரிமையில், பிறர் தன்னுரிமையில் தலையிடுவது ஆகும். அதுபோலவேதான் பிறர் கருத்துக்களை மாற்றவோ பிறரைத் தன் கருத்துக்குக் கொண்டு வரவோ முயற்சி செய்வதும் தவறு, மன்னுரிமையில் தலை யிடுவது, அதைச் சிதைக்க முற்படுவது ஆகும்.

தாம் நம்புவதைப் பிறரும் நம்ப வேண்டும், நாம் கருதுவதே பிறரும் கருத வேண்டும் என்று விரும்புவது போன்ற அநீதி வேறில்லை. தாம் நல்லன என்று நம்புபவற்றைப் பிறரும் அவ் வாறு நம்ப வேண்டுமென்று கருதுவது அநீதி முறைப்பட்ட அநீதி ஆகும். இது இரட்டை அநீதி.கண்டிக்க வேண்டிய ஒன்று உலகில் உண்டெனில் அஃது இதுவே! கடவுட் பண்புக்கு எதிரான கருமகன் பண்பு ஒன்று உண்டானால் அது இதுவே! ஆயினும் இதுவே பல இடங்களில் மிகப் பெரும்பாலாரால் பண்பாகக் கருதப்படுகிறது.

ஆத்திக நாத்திக வாத எதிர்வாதக் கேடுகள்

று

தாம் நம்புவதைப் பிறர் நம்பாததற்காக அவர்களைத் தீயர் என்பதுடன், கண்டிப்பதுடன் நில்லாமல், அவர்களை அழிக்கவே முற்படுகின்றனர், பல கிறித்தவர்! கிறித்து பெருமானின் பெயரால், அதையே கிறித்து பெருமான் பண்பு என்று கூறிக்