உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




194

அப்பாத்துரையம் - 29

கடவுள் உலகுக்கெலாம், மன்னுயிர்க்கெலாம், இயற்கை முழுவதற்கும் உரியவர் என்பதை ஏற்றுக்கொண்டு, கூக்குர லிட்டுக் கூவிக்கொண்டு, அக்கடவுட் பண்புடைய உலக முதல்வரின் பெயரையே சுட்டிக்கொண்டு, உலகைப் பிரித்தும், உலகில் அழிவு பரப்பியும், போட்டி பரப்பியும் வரும் இச் சமயவாதிகள் பின்பற்றும் முறைகள் கேலிக்குரியவையாகும். ஏனெனில் அவர்கள் உரத்துக் கூவும் ஒரு கடவுள், ஓருலகக் கொள்கைக்கே அவை முரண்பட்டவை.

தம்மை நல்லவர் என்றும், உயர்ந்தவர் என்றும் பிறரைத் தீயவர்கள் என்றும் தாழ்ந்தவர்கள் என்றும் கூறும் ஒவ்வொரு சமயத்தாரையும் மற்றச் சமயத்தார் தீயவர் என்றும் தாழ்ந்தவர் என்றுமே கருதுகிறார்கள். இதிலிருந்தே தம்மை நல்லவர் என்று முடிவு செய்வதும், பிறரைத் தீயவர் என்று முடிவு செய்வதும் அறியாமைக்குரிய இழிந்த செயல்கள் என்று காணலாம். உண்மையில் அறியாமை தவிர ஆன்மிக இருள், தீமை வேறு ல்லை. அறியாமை எங்கிருக்கிறதோ அங்கேதான், தாம் நல்லவர், பிறர் தீயவர் என்ற எண்ணம் எளிதில் உண்டாகும்.

அறியாமை யுடையவனே அகத்தே எல்லாம் நல்லனவாகக் கண்டு, புறத்தே எல்லாம் தீயனவாகக் காண்பான். அறிவின் வழி இதற்கு மாறானது. அது தீமையை அகத்தே தேடும். புறத்தே யாவும் நல்லன என்று கருதும். புறத்தே உள்ள தீமையைத் தீமை என்றே கருதாததனால், அது தீமைகள் யாவற்றையும் தனதெனக் கொண்டு திருத்திவிடும் தன்மையுடையது. இந்த இயல்பை அன்பு, அறச்சிந்தனை, நுண்ணோக்கு, அருள், அகல மனப் பான்மை ஆகிய பண்புகள் வளர்ப்பதனாலேயே நாம் அவற்றைத் தெய்வீகம் என்று கூறுகிறோம்.

தனி மனிதன் தன்னுரிமையே

காரணகாரியத் தொடர்பின் அடிப்படை

மெய்யறிவாளன், நல்லான் எல்லாவற்றிலும் நன்மை காண் கிறான்.நாடுகிறான். தீமை காண்பதில்லை. நாடுவதில்லை. பிறர் தான் எண்ணுவதுபோல எண்ண வேண்டுமென்றோ, செய்வது போலச் செய்ய வேண்டுமென்றோ அவன் கருதுவதில்லை. ஏனெனில் உடற்கட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் ஆக்கப்பட்டிருப்பதுபோலவே, உள அமைதியிலும் ஒவ்வொரு