உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

195

வரும் ஒவ்வொரு படிமுறையில் உள்ளவர்கள் ஆவார்கள். அவரவர்கள் உடலாக்க உள ஆக்கத்தின்படி, அவரவர்கள் உயிர் மலர்ச்சிப்படி ஆகியவற்றை யடுத்தே ஒவ்வொருவரும் ஒவ் வொரு வகையில் எண்ண முடியும், செயலாற்ற முடியும் என்பதை அவன் அறிவான்.

வெறுப்பு, கண்டனம், தற்செருக்கு, தற்கோட்டம் ஆகிய வற்றை விடுத்து, அக உணர்வொளியுடையவன் புறத்தே ஒளி காண்பான். ஒளிபரப்புவான். அகத்தீமையின் கூறுகளாகிய தூய்மைக்கேடு, வெறுப்பு, கொடுமை, உணர்ச்சி வெறி, சீற்றம், தற்பெருமை, தன்னலம் ஆகியன அவனுள் அகன்று அவனைச் சூழப் புறத்தேயும் தீமைகள் அகற்றும். அதே சமயம் அகத்தில் உலவும் அவன் அகப் பண்புகளாகிய தூய்மை, அன்பு, அரு ளிரக்கம், மெல்லியல்பு, பொறுமை, தற்பணிவு, தன்னலத்துறப்பு ஆகியவை உலகில் அறிவொளியும் இன்ப ஒளியும் பரப்பும்.

மற்ற மனிதர் செயலைப் பற்றி அவன் கருத்துச் செலுத்த மாட்டான். ஏனெனில் அவரவர் உள்ளப் பண்புக்கேற்றபடி, அவரவர் உள்ளத்தின் அறிவொளி, அறியாமை இருளுக் கேற்பவே அவர்கள் செயல் சூழ்வர். அவன் செய்யக் கூடிய தெல்லாம், செய்வதெல்லாம், அவர்கள் புறச் சூழல்களைத் தன் அகச் சூழலால் மாற்றுவதால், அவர்களும் தம்மையறியாமல் ஒளி நோக்கிப் படிப்படியாக விரைய உதவுவதேயாகும்.

நேர்மை, நேர்மைக்கேடு, நன்மை, தீமை ஆகியவற்றின் வேறுபாடுகள், அளவுகள், ஒவ்வொரு மனிதர் வகையிலும் அவரவர் படிகளுக்கேற்ப ஒவ்வொரு வகைப்படும். அவ்வப் படிகள், வகைகள், அளவுகள் அவரவர் நிலைக்கேற்ற பயன்களே தரும். அனுபவத்தாலேயே ஒவ்வொருவரும் வாய்மை வழி நோக்கி ஒவ்வொரு படியும் முன்னேற முடியும். ஆனால் எல்லாருக்குமுரிய பொது நேர்மை ஒன்று உண்டு. அதுவே தன்னுரிமை.

தான் விரும்பியபடி எண்ணும் உரிமையும் செயல் செய்யும் உரிமையும் ஒவ்வொருவருக்கும் உண்டு. அதை அடிப்படையாகக் கொண்டதே உலகின் காரணகாரிய நிகழ்ச்சி. தன்னுரிமையை ஒருவன் தன்னலப் படிகளில் நின்று, பிறர் இன்பம் நாடாமல் தன்

ன்பம் மட்டுமே நாடிப் பயன்படுத்தினால், இந்தக் காரண