(196) ||.
அப்பாத்துரையம் - 29
காரியப் பேரமைதியின் தண்டனையை அவன் தன் தலைமீது தானே இழுத்துக் கொள்கிறான். ஆனால் அத்தண்டனைகள் துன்ப வடிவாகவே வருவதால், அவை அக் காரணகாரியப் பேரமை பற்றிச் சிந்திக்க அவனுக்கு ஓய்வும் வாய்ப்பும் தருகிறது. இவ் ஓய்வும் வாய்ப்புமே அனுபவத்தின் அடிப்படை. அது அவனுக்கு உயிர் மலர்ச்சியில் முன்னேறுவதற்குரிய படிப்பினைத் தருகிறது.
று
துன்பம், ஓய்வின் வாய்ப்பு, சிந்தனை, சிந்தனையின் படிப்பினை - இந்த வரிசையில் அமையும் அனுபவ அறிவைப் போன்ற ஆன்மிக நல்லாசான் வேறு கிடையாது. மனிதர் அறியாமையால் தம்மீது சுமத்திக் கொள்ளும் தண்டனையையே இயற்கை இவ்வாறு அவர்களைத் திருத்தித் தூய்மைப்படுத்தி ஒளிகாட்டும் நல்லாசான், நல்லறிவுப் போதகர் ஆக்கிவிடுகிறது.
எல்லாம் வல்ல கடவுள் முழுநிறை அருளாளராகவும் இருந்து, தீமையகற்றி நலம் செய்கிறார் என்ற சமயப் பேருண்மையின் உட்பொருள், மறைதிறவு இதுவே.
அறிவின் இன்மையாகிய அறியாமையன்றித் தீய பண்பாக அறியாமை என்ற ஒன்று கிடையாது. ஏனெனில் அறியாமை என்பதெல்லாம் உண்மையில் தன்னலத்தாலும் அதன் விளைவு களாலும் ஏற்படும் இயற்கை அமைதி பற்றிய தற்காலிக அறியாமையே. அறியாமை வளர்ந்து செல்லும்போதுகூட, அது அறிவை விட்டு நெடுந்தொலை செல்வதில்லை. ஏனெனில் அது அறிவைவிட்டுச் செல்லுந் தொலைக்கேற்பத் துன்பமும் பெரிதாகிறது. துன்பம் பெரிதாவது விரை திருத்தம் நோக்கியே.
தன்னலவாணன் பிறர்பற்றிக் கவலைப்படாததுபோல, இயற்கை பற்றியும் கவலைப்படாது துன்பம் பெருக்கிக் கொள் கிறான். எந்த நேரத்தில் துன்ப காரணம் தன்னலம் என்று அவன் கண்டு கொண்டானோ, அந்தக் கணமுதல் அறிவு நோக்கிய அவன் பயணம் விரைவாகி விடுகிறது.ஏனெனில் துன்பத்தினளவு அதன் விரைவை ஊக்கும் அனுபவத்தின் க்கும் அனுபவத்தின் அளவாகிறது.