உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

உண்மையான தீர்ப்பு உணர்ச்சியின் தீர்ப்பல்ல, அறிவின் தீர்ப்பல்ல - அன்பின் தீர்ப்பே!

197

துன்பத்தால் பண்பட்டுத் தன்னலமிழந்த மனிதனே நல்ல மனிதன். அவனே மெய்யுணர்வாளன், மெய்யறிவுடையவன். அவனும் எல்லாரும் ஒப்பத் தன் வழியைத் தானே தேர்ந்து கொள்பவனே. ஆனால் அவன் வழி அறிவுக் கண் திறந்து கொண்டு செல்பவன் வழி. அறியாமையின் வழியும் அதன் பயனான துன்பத்தின் வழியும் கடந்து அவன் அறிவொளிக்கு இலக்காகிறான்.

பிறரைப் பற்றிய தன் கருத்துக்களிலே தன் தனிப்பட்ட அவாக்களை விலக்கி, அவர்களைத் தன் நிலையிலன்றி, அவர்கள் வழி நின்றே அறிந்து அவர்கள் படியில் நின்றே அவர்கள் செயலை ஒருவன் உணரும்போதுதான் தீமை பாராமை என்ற பண்பை அவன் மேற்கொள்ளத் தொடங்குகிறான். இவ்வாறு செய்யாமல் தானே இது சரி, இது தவறு என்று நன்மை தீமைக் கூறுபாடு அமைத்துக்கொள்வதனாலும், அந்தத் தன் முனைப் பான செயற்கைக் கூறுபாடுகளின் அடிப்படையில் மற்றவர் களைப் பற்றிய அவசர முடிவுகள் செய்து கொள்வதனாலும், மனிதன் தீமை என்ற ஒன்றைக் காண முடிகிறது. இது நீர் என்று எண்ணியவனுக்குக் கானல் கனலாகத் தோற்றாமல் நீராகத் தோற்றுவது போன்றதே என்னலாம்.

வ்வகையில் கானல், நீர் என்ற இவற்றினும் சிறந்த உவமை பேய், மரம் என்பதே. பயந்தவன் உள்ளத்திலுள்ள பேயச்சம் இருட்டில் மரத்தின் வடிவசைவைக் கண்டு பேயென எண்ணி அலமருகிறது. இங்கே பேய் என்று புறத்தே எதுவும் கிடையாது. அதுபோலத் தீமை என்ற ஒன்று எதுவும் புற உலகில் இல்லை. அகத்தே உருவான அச்சப் பேய் புறத்தே மரத்தைப் பேயாக்கிக் காட்டுவது போல, உள்ளத்தில் உள்ள நச்சுப் பண்புகளே புற உலகில் தீமையல்லாதவற்றையும் தீமைகளாகக் காணச் செய்கின்றன.

ஒருவரைப் பற்றிய உண்மையான தீர்ப்பு அறிவின் தீர்ப் பல்ல, அன்பின் தீர்ப்பே! தான் வகுத்த நன்மை தீமை வகுப்பு முறையின்படி, தன் திட்டப்படியே அறிவின் தீர்ப்பு பிறரை