198
அப்பாத்துரையம் - 29
மதிப்பிடுகிறது. அம்முறையில் அது தம்மிடம் உள்ள நன்மை தீமைகளை அவர்களிடம் காண முடியும். ஆனால் அன்புத் தீர்ப்பு அவர்கள் நன்மை தீமை வகுப்பு முறையிலிருந்தே, அவர்கள் மனப்பாங்கிலிருந்தே அவர்களை உணர்கிறது. இத் தீர்ப்பில் அவர்களிடம் தீமையே காண முடியாது. உயிர் மலர்ச்சியில் அவர்கள் அடைந்துள்ள படியையே காண முடியும். அதிலிருந்து அவர்கள் உயர உயர, அவர்கள் அறியாமையின் புற நிழல் அகலும். இது வரையிலும் அன்புத் தீர்ப்பு ஒன்றே அவர்கட்கு உதவ முடியும். அது அவர்கள் படியை, தளத்தை உயர்த்தி, அவர்கள் சூழலை மாற்றி, அவர்கள் அகப்பண்பை உயர்த்த முயலும்.
ள
அன்புத் தீர்ப்புக்குரிய அன்பு குறுகிய தன்னலச் சார்பான அன்பன்று. அது உறவு, நட்பு, இனம், நாடு ஆகிய எல்லையில் நிற்பதல்ல. கைம்மாறு கருதுவதல்ல. அது உலகளாவிய பொது நல அன்பு. இந்தத் தற்சார்பற்ற, நடுநிலைகோடாத அன்புதான் மெய்யறிவு. அதனடிப்படையில், அதன் ஒளியூடாக நாம் உலகையும் பிறரையும் உள்ளவாறு காண்கிறோம். பிறரைப் பற்றிய ஒரு முடிவுக்கு நாம் வருமுன் அது நம் காதுகளில் அம்முடிவு பற்றி நம்மை எச்சரிக்கிறது.
'உன்னைப்போல ஒரு மனிதன்தான் அவனும்! அவனைப் பற்றி மதிப்பிட்டு முடிவு செய்ய நீ யார்? உனக்கேது அந்த உரிமை? பிறர் தீமைகளைக் காணும் உரிமை உனக்கு ஏற்படுமுன், நீ உன் தீமைகளைக் களைந்து விட்டாயா? பழிதுடைத்துத் தூய்மை யாய் விட்டாயா? தற்செருக்குடன் அவனைத் திருத்த முற்படு முன், நீ முதலில் தற்பணிவு மேற்கொள். உன் பிழைகளை முதலில் அகற்று. அதன்பின் நீ மற்றவர்களை மதிப்பிடத்தக்கவன் ஆதல் எளிது. ஏனென்றால் அவர்களிடம் பிழை இல்லை. அறியாமை மட்டும்தான் உண்டு என்று அப்போதுதான் நீ அறிவாய்!' இவ்வாறு அது கூறுகிறது.
உண்மை மனமாற்றம்:
பழிகாரிக்குப் பெரியார் காட்டிய நெறி
முன்னாட்களில் பழிகேடுகளில் படுமோசமான பழி கேடுகளைச் செய்த ஒரு பெண்ணைப் பலர் சூழ்ந்து கல்லெறிந்து